ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 22, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

மத்திய பல்கலைக் கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 25 சதவீதம் கூடுதல் இடங்கள். கியூட் எனும் நுழைவுத் தேர்வு இல்லாமல் சேர்க்கலாம் என ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் 54 பல்கலைக் கழகங் களுக்கு யு.ஜி.சி. உத்தரவு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

விரைவில் மகாராட்டிரா மாநில முதல்வராக தற் போதைய துணை முதலமைச்சர் பட்னாவிஸ் பதவி ஏற்பார் என அம்மாநில பாஜக தலைவர் பேச்சு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

பிரதமர் மோடியின் நண்பர் அதானிக்கு உதவுவதற் காகவே, இதுவரை வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தரப்படவில்லை; இந்நிலை நீடித்தால், விவசாய அமைப்புகளால் மீண்டும் கடுமை யான போராட்டம் நடத்தப்படும் என மேகாலாயா ஆளுநர் சத்யபால் மாலிக் எச்சரிக்கை.

டைம்ஸ் ஆப் இந்தியா:

ஓ.பி.சி. உட்பிரிவுகளின் இட ஒதுக்கீடு சதவீதத்தை அதிகரிக்க உ.பி. அரசு முடிவு.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment