தமிழ்நாடு காவலர் தேர்வு: தேர்வு முறை, பாடத்திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 17, 2022

தமிழ்நாடு காவலர் தேர்வு: தேர்வு முறை, பாடத்திட்டம்

தமிழ்நாடு காவல்துறையில் காவலர் பணியி டங்களுக்கான தேர்வுக்கான தேர்வு முறை, பாடத் திட்டம் உள்ளிட்ட தகவல்களை பார்ப்போம்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேர்வு முறை

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக் கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு

எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் 40% அல்லது 32 மதிப் பெண்கள் பெற வேண்டும். இல்லையென்றால் இரண்டாம் பகுதி மதிப்பீடு செய்யப்படாது. இரண் டாம் பகுதியில் பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும். இது 70 மதிப் பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கியதாக இருக்கும்.

உடற்தகுதி தேர்வு

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். இது 24 மதிப்பெண்களுக்கு நடத்தப் படும்.NCC அல்லது NSS அல்லது விளையாட் டில் சிறந்து விளங்குபவர்களுக்கு சிறப்பு மதிப் பெண்களாக தலா 2 மதிப்பெண்கள் என மொத் தம் 6 மதிப்பெண்கள் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மற்றும் சிறப்பு மதிப் பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு செயல்முறை இருக்கும். தேர்வர்கள் 100 மதிப்பெண்களுக்கு பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், வேலை வழங்கப்படும்.

தமிழ் மொழி தகுதித் தேர்வு

இலக்கணம் - எழுத்து, சொல், பொருள், பொது, யாப்பு, அணி, மொழித்திறன், பிரித்து எழுதுதல், பிழைத் திருத்தம், எதிர்ச்சொல், சேர்த்து எழுதுதல், மொழிபெயர்ப்பு இலக்கியம் - திருக் குறள், தொல்காப்பியம், கம்பராமயணம், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, அய்ம்பெருங்காப்பியங்கள், அய்ஞ்சிறுகாப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக் கியம், புதுக்கவிதை, மொழிப்பெயர்ப்பு நூல்கள் உள்ளிட்டவை தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் - தமிழ் அறிஞர்கள், தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு, உரைநடை, தமிழ் தொண்டு, சமுதாயத் தொண்டு

முதன்மை எழுத்துத் தேர்வு

இரண்டாம் பகுதியாக முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் பெறக் கூடிய மதிப்பெண்கள் அடிப்படையில் தான் அடுத்த செயல்முறைக்கு தகுதி செய்யப்படுவார்கள். இது 70 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் பொது அறிவுப் பகுதியில் இருந்து 45 வினாக்களும், உளவியல் பகுதியில் இருந்து 25 வினாக்களும் இடம் பெறும்.

பொது அறிவு - இயற்பியல், வேதியியல், உயிரியல், சூழ்நிலையியல், உணவு & ஊட்டச்சத்தி யல், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொரு ளாதாரம், நடப்பு நிகழ்வுகள் ஆகிய பகுதிகளி லிருந்து வினாக்கள் இடம்பெறும். உளவியல் - தொடர்பு அல்லது தொடர்புகொள் திறன், எண் பகுப்பாய்வு, தருக்க பகுப்பாய்வு, அறிவாற்றல் திறன், தகவல்களைக் கையாளும் திறன் ஆகியவற்றில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

கணிதம் - சுருக்குக, மீ.பெ.வ & மீ.சி.ம, எண் ணியல், விகிதம், சதவீதம், சராசரி, வயது கணக்கு கள், லாபம் & நட்டம், நேரம் & வேலை, சங்கிலி தொடர், குழாய் & தண்ணீர் தொட்டி, தனிவட்டி, கூட்டு வட்டி, அளவியல், பரப்பளவு, கன அளவு, புள்ளியியல், கோணங்கள், இயற்கணிதம், தரவு கணக்கீடு ஆகியவை கணிதப் பகுதியில் கேட்கப்படும் முக்கிய தலைப்புகளாகும்.

தேர்வுக்கு தயாராவது எப்படி?

இவற்றில், தமிழ் மற்றும் பொது அறிவு பகுதி களுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக புக் பேக் கொஸ்டின் மற்றும் அடைப்புக்குள் உள்ள தகவல்களையும் நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். இந்த முறை 70 கேள்விகள் கேட்கப்பட உள்ள நிலையில், அவை எளிமையாக கேட்கப் படலாம். ஏனெனில் காவல்துறை உதவி ஆய் வாளர் தேர்வில் வினாக்கள் எளிமையாக இருந்தன. இருப்பினும், கட் ஆப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பில்லை. ஏனெனில் காலியிடங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் போட்டி கடுமையானதாக இருக்கும். உடற்தகுதி தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமா கவும், அதிகமானோர் தேர்வுக்கு போட்டியிடலாம்.

இந்த 70 கேள்விகளில் 27 கேள்விகள் வரலாறு, குடிமையியல், அரசமைப்பு, புவியியல் அடங்கிய சமூக அறிவியல் பாடத்தில் இருந்தும், 20 கேள்வி கள் உளவியல் பாடத்திலிருந்தும், 10 கேள்விகள் அறிவியல் பாடத்திலிருந்தும், 8 கேள்விகள் நடப்பு நிகழ்வுகளில் இருந்தும், 5 கேள்விகள் தமிழில் இருந்தும் இடம்பெறலாம். அதற் கேற்றாற்போல் தேர்வர்கள் தயாராகிக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment