பில்கிஸ் பானு வழக்கு : குற்றவாளிகள் விடுதலை ஒன்றிய, குஜராத் அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

பில்கிஸ் பானு வழக்கு : குற்றவாளிகள் விடுதலை ஒன்றிய, குஜராத் அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி, ஆக.26 குஜராத் மாநில அரசு, பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஒன்றியஅரசு, குஜராத் அரசு பதில் அளிக்க  உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பி உள்ளது. பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளுக்கு விடுதலை அளித்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து சிபிஅய் (எம்) எம்.பி. சுபாசினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லால் மற்றும் பேராசிரியர் ரூப் ரேகா வர்மா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலை மையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது.

2002ஆம் ஆண்டு கோத்ரா  இனக்கலவரத்தின்போது,  5 மாத கர்ப்பிணியாக இருந்த 21 வயதான பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டார். அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட 14 பேர் அன்றைய கல வரத்தில் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு தொடர்பாக கைதான 11 பேர் கைது செய்யப் பட்டு, அவர்களுக்கு கடந்த  2008ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில்,  நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநிலஅரசின் நன்னடத்தை விதிகளின்படி,  கடந்த 15ஆ-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். குஜராத் மாநில அரசு விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில்  மனு தாக்கல் செய் யப்பட்டது. 

இந்த மனு மீது, தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதி அஜய் ரஸ்தோகி, நீதிபதி விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது,  குற்றவாளிகளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்றும், குற்றவாளிகள் விடுவிக் கப்பட்ட விவகாரம் சட்டப்படி நடை பெற்றதா என்பது குறித்து விசாரிக்கப்படும் என  தெரிவித்தார்.

இந்த வழக்கில் விடுவிக்கப் பட்ட குற்றவாளிகளும் ஒரு தரப்பாக கருதப்படுவார்கள் என தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து ஒன்றிய அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்ப உத்தரவிட் டுள்ளது. மேலும், இந்த வழக் கின் அடுத்த விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்

No comments:

Post a Comment