இன்றும் நாளையும் "சென்னை தினம்" அனுசரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

இன்றும் நாளையும் "சென்னை தினம்" அனுசரிப்பு

சென்னை, ஆக. 20 “நம்ம சென்னை, நம்ம பெருமை” என்ற பெயரில் சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை சாலையில் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: "சென்னைப் பட்டினம் 1639-ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை 383 ஆண்டுகளில் சென்னை மாநகரமாக பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் சார்பில் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து "சென்னை தினத்தை" பெசன்ட் நகர், எலியட்ஸ் சாலையில் மாலை 3:30 மணி முதல் இரவு 11:30 வரை பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட உள்ளது.


No comments:

Post a Comment