பீகாரைப் போல உ.பி.யிலும் கூட்டணிகள் மாறும்: அகிலேஷ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

பீகாரைப் போல உ.பி.யிலும் கூட்டணிகள் மாறும்: அகிலேஷ்

லக்னோ, ஆக.20- பீகார் மாநிலத்தைப் போல உத்தரப் பிரதேசத்தி லும் பாஜக கூட்டணியை விட்டு கட்சிகள் வெளியே றும் என்று அம்மாநில மேனாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலை வருமான அகிலேஷ் கூறியுள்ளார். 

பீகாரில் பாஜக கூட்டணி யிலிருந்து வெளியேறிய அய்க்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கை கோர்த்து ‘மகா கூட் டணி’ அரசை ஏற்படுத்தி யுள்ளார். நிதீஷின் இந்த முடிவு, எதிர்க் கட்சிகளின் அணிக்கு புதிய உற்சா கத்தை அளித்துள்ளது. இந்நிலையில், லக்னோ வில் உள்ள சமாஜ்வாதி தலைமையகத்தில்  செய் தியாளருக்கு அகிலேஷ் பேட்டி  அளித்துள்ளார். அதில் அவர் கூறி யிருப்ப தாவது:

‘பீகாரில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற் றம், தேசிய அரசியலுக் கான நேர் மறையான  அறிகுறியாகும். பாஜக வின் அரசியல் கூட்டாளி கள் மகிழ்ச்சியாக இல்லை. உத்தரப்பிரதேசத் தில் அவர்கள் (பாஜக கூட் டணி கட்சிகள்) என்ன பெறுகிறார்கள் என்ப தைப் பாருங்கள். ஒரு நாள் அவர் களும், பாஜக-வை விட்டு ஓடி விடு வார்கள். 2024 மக் களவைத் தேர்த லில் பாஜகவுக்கு எதிராக வலுவான மாற்று சக்தி உரு வாகும். அதனை மக்கள் ஆதரிப்பார்கள். ‘இது தொடர்பான பணி களில், தெலுங் கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ், மேற்கு வங்க  முதலமைச்சர் மம்தா,  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள் ளிட்டோர் ஈடுபட்டுள்ள னர். என்னைப் பொறுத்த வரை, எங்களது கட்சியை அமைப்பு ரீதியில் வலுப் படுத்தவும் மறுசீரமைக்க வும் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன். உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல், 2 மக்களவைத் தொகுதி களின் இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் நிறைய நேர்மையற்ற செயல்களை செய்தது. அது எதிர்ப்பு குரல்களை கேட்கவில்லை. வாக் காளர் பட்டியலில் இருந்து ஏராளமான வாக்குகள் நீக்கப்பட்டன. ராம்பூரில் சமாஜ்வாதி கள் வாக்களிக்க அனு மதிக்கப்படவில்லை, ஆசம்கரில் சமாஜ்வாதி கட்சியினருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட் டது. எங்கள் புகார்களு க்கு அது செவிசாய்க்க வில்லை. ஒன்றிய அரசின் அழுத் தமே இதற்கு காரணம். இவ்வாறு அகிலேஷ் கூறி யுள்ளார்


No comments:

Post a Comment