கலைஞர் நினைவு நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 2, 2022

கலைஞர் நினைவு நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

சென்னை, ஆக.2- தி.மு.க.வில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தலைவராக பதவி வகித்தவர் கலைஞர். தேர் தலில் தோல்வி அடையாத தலைவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ஆம்தேதி அவர் மரணம் அடைந்தார். அவருக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக் கப்பட்டுள்ளது. முக்கிய நாட்களில் தி.மு.க. தலைவர்கள் கலைஞரின் நினைவிடத்தில் மரியாதை செலுத் துவது வழக்கம். இந்த நிலையில் வருகிற 7ஆம்தேதி அவருக்கு 4ஆம் ஆண்டு நினைவுநாள் ஆகும். இதை யொட்டி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடத்தப் போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

தகைமைசால் தலைவராக, எழுத்தாளராக, கவிஞராக, சொற் பொழிவாளராக, திரைக்கதை வசனகர்த்தாவாக, இலக்கியவாதி யாக, திரைப்படத் தயாரிப்பாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, தமிழ் நாட்டின் அய்ந்து முறை முதலமைச் சராக, உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக கலைஞர் விளங்கினார். 

திராவிட இயக்கத்தின் போர் வாள்களில் ஒருவராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கி, பின்னர், அறிஞர் அண்ணாவோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றினார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழ்நாட்டு வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்டார். 

முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் கலைஞரின் 4ஆவது நினைவுநாளினை யொட்டி முதல மைச்சர், மு.க.ஸ்டாலின் தலைமை யில் பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, எம்.பி., முதன்மைச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட தி.மு.கழக முன்னணியினர் கலந்துகொள்ளும் "அமைதிப் பேரணி", வருகிற 7ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 8.30 மணிக்கு சென்னை, அண்ணாசாலை, ஓமந் தூரர் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகில் இருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினை விடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment