பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் இருக்கையின் சார்பாக நினைவுநாள் நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 5, 2022

பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் இருக்கையின் சார்பாக நினைவுநாள் நிகழ்ச்சி

வல்லம், ஆக. 5- பெரியார் மணி யம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் அப்துல்கலாம் 7-ஆம் ஆண்டு நினைவு நாள் கடைப் பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் இருக்கையின் சார்பாக சமூகப்பணித்துறையும், விண்வெளி பொறியியல் துறை யும் இணைந்து வானூர்தி மாதிரி விளக்கம் மற்றும் மரக்கன்று நடும் விழா வல்லம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல் கலைக்கழகத்தின் துணைவேந் தர் முனைவர் வேலுச்சாமி மரக்கன்றுகளை நட்டு விழாவை துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி யில் மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குமார்  விழாவில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

இதனைத் தொடர்ந்து வானூர்தி மாதிரி விளக்க நிகழ்ச் சியில் பல்கலைக்கழக துணை வேந்தர் அப்துல்கலாம் சிறுவயது முதலே நல்லொழுக் கம், பணிவு மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து என் றும் தனது விடா முயற்சியுடன் செயல்பட்டதாகக் கூறினார். அதை போல அப்துல் கலாம் சிந்தனைகள் அனைத்தும் குழந் தைகளையும், இளைஞர்களை யும் நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு வழிவகுக்கும் விதமாக இருந்த தாக கூறினார். பெரியாரின் கிராம சீர்திருத்த சிந்தனைகளை யும் அதைப் போல கலாம் அவர் களின் புரா திட்டமும் ஒரே குறிக்கோள் கொண்டதாக இருந்தது என்றார். அதைப்போல பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி கூறியது போல "நம் மால் முடியாதது யாராலும் முடியாதது - யாராலும் முடியா தது நம்மால் மட்டுமே முடியும்" என கூறி மாணவர்களை ஊக்கு வித்தார்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பா ளர்குமார் தனது கருத்துரையில் 1998-ஆம் ஆண்டில் நடந்த போக் ரான் அணுகுண்டு சோதானை வெற்றியில் தொழில்நுட்ப மற் றும் அரசியல் ரீதியாக அப்துல் கலாம் முக்கிய பங்காற்றினார் என்றும், நாட்டின் பாதுகாப் பிற்கு ராணுவம் எவ்வளவு முக்கியமோ அதைபோல மரங் களும் உலக பாதுகாப்பிற்கு முக்கியம் எனக் கூறி மரங்களை வளர்த்து எப்போதும் பாது காக்க வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து விண்வெளி பொறியியல் துறை தலைவர் மாணவர்களுக்கு விண் வெளி பொறியியல் துறை பற்றி யும், வானூர்தி மாதிரி விளக் கங்களும் மாணவிகளுக்கு புரி யும் வகையில் எடுத்துரைத்தார். விண்வெளி பொறியியல்துறை மாணவ மாணவிகள் வானூர்தி மாதிரி காகிதத்தில் செய்து காட்டி - அதனை அனைத்து மாணவிகளையும் எவ்வாறு செய்வது என்று கற்று கொண் டனர். மேலும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் ஆள் இல்லா விமானம் வகையான காணொலி காட்சிப் பதிவுகளை மாணவர்க ளுக்கு காட்டி அதன் பயன் முறைகளை விளக்கினார். மேலும் ஆள் இல்லா விமானக் கண்டுபிடிப்பில் இந்தியா 7-ஆம் இடத்தில் இருக்கிறது எனவும் கூறினார்.

மேலும் இப்பள்ளியில் பயி லும் 5 மாணவர்கள் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை வெவ் வேறு தலைப்புகளில் பேசி பரிசு களை பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து சமூகப்பணித்துறை தலைவர் முனைவர் கி. ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் அவர்கள் தனது உரையில் அப்துல்கலாம் 6 முறை பல்கலை கழகத்திற்கு வந்துள்ளார் என்றும், பல்கலை கழகம் தத்தெடுத்துள்ள பெரியார் புரா திட்டத்தை செயல்படுத்தி வரும் கிராமத் திற்கே நாட்டின் குடியரசுத் தலைவராக  இருக்கும் போதே அவர் வந்தார் என்பதனை பெருமையுடன் கூறினார். மேலும் இவர் நாட்டுக்காகவும் மாணவர்களின் வளர்ச்சிக்காக வும் பாடுபட்டார் என கூறினார். அவர் விட்டு சென்ற பணிகளை செய்வதற்காக இம்மாதிரியான நிகழ்ச்சிகளை சமூகப்பணித் துறை தொடர்ந்து ஒருங் கிணைந்து நடத்தி வருவதாக கூறினார். முனைவர் சூ.ஞான ராஜ், உதவி பேராசிரியர் அனை வருக்கும் நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் 83 மாணவ மாணவிகள் பங்கேற்று பயன டைந்தனர், சமூகப்பணித்துறை மாணவ மாணவிகள் ஒருங் கிணைத்தனர்.

No comments:

Post a Comment