சித்தர்காடு தோழர் செ. ராமையா எழுதுவதாவது:-
மாயவரம் தாலுக்கா ராமாபுரம் என்ற கிராமத்தில் சென்ற 30.8.1944ஆம் தேதி பார்ப்பனர்கள் கூடி ஒரு யாகம் நடத்தினார்கள். ஓம குண்டத்தில் பலியிடப்பட்ட ஆட்டைப் பொசுக்கி அங்கு கூடிய பார்ப்பனர்கள் தின்று மகிழ்ந்தார்கள். இதில், படித்துப் பட்டம்பெற்று உத்தியோகம் வகித்து வரும் பார்ப்பனர் அதி காரிகளும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்க தாகும்.
இந்த யாகத்தை நடத்தினவர்கள் பி.ஏ. படித்த சாஸ்திரிகள் உட்பட பல பார்ப்பனர்கள் என்று தெரிகிறது. யாகத்தில் வெந்த ஆட்டி றைச்சி அவ்வளவு ருசிபோலும் இவர்களுக்கு, இவ்வளவு நாகரிகம் வாய்ந்த இந்த நாளில் யாகத்தின் பெயரால் ஆட்டை சித்திரவதை செய்வது கொடுமையிலும் கொடுமையாகும்.
குடிஅரசு - பெட்டிச் செய்தி
- 09.09.1944