இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை வெறுப்பைத் தூண்டும் பிரதமர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 16, 2022

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை வெறுப்பைத் தூண்டும் பிரதமர்

புதுடில்லி,ஆக.16- இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை தொடர்பாக நேருவை விமர் சித்து பாஜ வெளியிட்ட காட்சிப் பதிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளது. இந்தியாவில் இருந்து தனி நாடாக பாகிஸ் தான் கடந்த 1947ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரிந்து சென்றது. அந்த நாளை தனது சுதந்திர தின மாக பாகிஸ்தான் கொண்டாடுகிறது. அதே வேளையில்,  இந்த பிரிவினையின்போது ஏற்பட்ட வலி களை நினைவுக்கூரும் வித மாக, இந்தியாவில் இந்த நாள் ‘பிரிவினை கொடுமைகள்’ நினைவு தினமாக அனுசரிக்கப் படும் என கடந்தாண்டு, ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி  14.8.2022 அன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்தியா - பாகிஸ் தான் பிரிவினையின்போது, உயிரிழந்த மக்கள் அனைவ ருக்கும் இன்று இரங்கல் செலுத்துகிறேன். நமது வரலாற் றின் சோகம் நிறைந்த காலக் கட்டத்தில் பாதிக்கப் பட்ட போதும், அதில் இருந்து மீண்டு மகிழ்ச்சியுடனும், வெற்றியுடனும் மற்றும் மனவுறுதியுடனும் உள்ள அனைவரையும் பாராட்டுகி றேன்,’ என்று கூறியுள்ளார். இந்நிலையில், நாட்டின் 2ஆவது பிரிவினை பயங் கரங்கள் நினைவு நாளான 14.8.2022 அன்று காங்கிரசை தாக்கும் வகையில் 7 நிமி டங்கள் ஓடும் காட்சிப் பதிவை பாஜ  வெளியிட்டு உள்ளது.

அதில், ‘பாகிஸ்தான் உருவாவதற்காக முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ் லிம் லீக்கின் கோரிக்கைகளுக்கு மேனாள் பிரதமர் நேரு தலை வணங்கி விட்டார்,’என குற்றம் சாட் டும் வகையில், காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பதிலடி கொடுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டிவிட் டர் பதிவில், ‘இந்த நாளை குறிப்பிடும் பிரதமர் மோடியின் உண்மை யான நோக்கமானது, தற் போது நடந்து வரும் அரசியல் போரில், துயர் நிறைந்த வர லாற்று நிகழ்வுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ப தாகும். நவீன சாவர்க்கர்கள், ஜின்னாக்கள் தொடர்ந்து நாட்டை பிரிக்கும் முயற்சி களில் ஈடுபட்டு வருகிறார்கள், ’என்று குற்றம்சாட்டி உள் ளார்.

No comments:

Post a Comment