தமிழ்நாட்டிற்கு பொருளாதாரம் குறித்த அறிவுரை கூற, முதலில் ஒன்றிய அரசுக்கு தகுதி இருக்க வேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 21, 2022

தமிழ்நாட்டிற்கு பொருளாதாரம் குறித்த அறிவுரை கூற, முதலில் ஒன்றிய அரசுக்கு தகுதி இருக்க வேண்டும்!

பழனிவேல் தியாகராஜன் விளாசல்

சென்னை, ஆக.21- “தமிழ்நாட்டிற்கு பொருளா தாரம் குறித்த அறிவுரைகள் கூற, ஒன்றிய பாஜக அரசுக்கு தகுதி இருக்க வேண்டும். அந்த தகுதி அவர்களுக்கு இருக்கிறதா?” என்று  தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்  சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழ்நாடு போன்று பல்வேறு  மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வரும் இலவசத் திட்டங்களை தடுக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு  இறங்கி யுள்ளது. தனது கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் அஸ்வினி உபாத் யாய மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரச் செய்து, நீதிமன்றம் மூலமாகவே இந்த தடையை விதிக்கவும் அது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த விடயத்தில் பிரதமர் மோடி துவங்கி பலரும் மாநிலங்க ளுக்கு அறிவுரைகளை வழங்கி வரு கின்றனர். இதற்கு ஆங்கிலத் தொலைக் காட்சி விவாதத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித் துள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:

தமிழ்நாடு அதிக அளவில் நிதியளிக்கிறது

ஒன்றிய அரசின் கருவூலத்திற்கு தமிழ்நாடு அதிக அளவில் நிதியளிக்கி றது. நாம் (தமிழ்நாட்டு மக்கள்) ஒரு  ரூபாயை ஒன்றிய அரசுக்கு கொடுத்து  விட்டு, 33 அல்லது 35 காசுகளை  மட்டுமே ஒன்றிய அரசிடமிருந்து பெறுகிறோம். இதற்கும் மேலாக  ஒன்றிய அரசு நம்மிடம் என்ன எதிர் பார்க்கிறது? எதன் அடிப்படையில் ஒன்றிய அரசுக்காக தமிழ்நாட்டின் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்? நீங்கள் (ஒன்றிய அரசு) அரசமைப்பு சட்டத்தின் அடிப்ப டையில் ஆலோசனை கூறுகிறீர் களா அல்லது பொருளாதாரத்தில் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளீர்களா? அல்லது நோபல் பரிசு  பெற்றுள்ளீர்களா? பின்னர் ஏன் அறி வுரை? எங்களை விட நீங்கள் தகுதி யானவர்கள் என்று சொல்வதற்கு ஏதேனும் உங்களிடத்தில் இருக்க வேண்டும் அல்லவா? பொருளாதாரத்தை சிறப்பாக  முன்னேற்றியுள்ளீர்கள் என்பதற்கான, கடன்களை குறைத்துள்ளீர்கள் என்பதற்கான, தனி நபர் வருமா னத்தை அதிகரித்ததற்கான, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்தீர் கள் என்ப தற்கான ஆதாரம் உங்களிடத்தில் இருந்தால் நிரூபித்து விட்டு  பின்னர் எங்களுக்கு அறிவுரை கூறுங்கள்.

நான் ஏன் மற்றவர்களுடைய கருத்தை 

ஏற்றுக் கொள்ள வேண்டும்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனைகள் வழங்க பன்னாட்டு அளவில் 5 பொரு ளாதார நிபுணர்கள் இருக்கிறார் கள். இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் ஆளுநராக பணியாற்றிய ரகுராம் ராஜன், இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணி யன், மேனாள் பிரதமர் வாஜ்பா யின் பொருளாதார ஆலோசகராக இருந்த எஸ்.நாராயணன், பேராசிரி யர் ஜான் த்ரே மற்றும் எஸ்தர்  டப்லோ ஆகியோர் இருக்கிறார்கள்.  அனைவரும் பன்னாட்டு அளவில் மாபெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள் ஆவர். இவ்வாறிருக்கையில், நான் ஏன் மற்றவர்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ள வேண் டும்? 

அர்த்தமற்றது; கேலிக்கூத்து 

இலவச திட்டங்களுக்கு எதிரான விவாதம் என்பதே அர்த்தமற்ற ஒன்றாகும். பணமதிப்பு நீக்கம், தேர்தல் பத்திரங்கள், அரசமைப்பு  சட்டம் 370 நீக்கம் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உள்ளது. மக்களின் பணத்துக்கு  உச்சநீதிமன்றத்தை பாதுகாவல ராக அரசமைப்பு சட்டம் சுட்டிக்  காட்டவே இல்லை. தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் பணத்தை எப்படி செலவு செய்வது என்று சட்டமன்ற, நாடாளு மன்றத்தில் முடிவு செய்வார்கள். இதில் உச்ச நீதிமன் றம் ஏன் குறுக்கே வருகிறது என்று  எனக்கு புரியவில்லை. உச்சநீதிமன்றத்திலிருந்து உத்தரவு வந்தாலும் அது அர்த்தமற்றதுதான். இல வசங்கள் தொடர்பான விவாதங்கள் கேலிக்கூத்தானவை.

பிரதமர் மோடியின் பாசாங்குத்தனம்

பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்  நாட்டில் அதிமுக ஆட்சியில் இருந்த போது ஸ்கூட்டருக்கு ரூ.25 ஆயிரம்  மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக டில்லியில் இருந்து ஏன் வந்தார்? இதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் பாசாங்  குத்தனம். பிரதமர் நரேந்திர மோடி  தான் செய்வதை மட்டும் நல்ல செயல் என்றும், அதுவே மற்றவர்  கள் செய்தால் தவறு என்றும் நினைக்  கிறார். இது அவரின் நயவஞ்சகத்  தனம். இந்தி பேசும் மாநிலங்க ளுக்கு பாஜக இலவசங்களை கொடுத்தே வாக்குகளை பெற்றது. 

காலனியாதிக்க செயல்பாடு....

காலனியாதிக்க செயல்பாடு ஒன்றிய அரசிடம் இருக்கிறது. டில்லிக்கு எல்லாம் தெரியும், டில்லி எல்லா வற்றையும் கட்டுப்படுத்துகிறது, டில்லியே அனைத்து நன்மைகளுக்கும் காரணம் என்று நினைக்கிறார்கள். தங்களின் உத்தரவுகளை செயல் படுத்தும் முகவர்கள் என்றே  மாநிலங்களை ஒன்றிய அரசு  நினைக்கிறது. 100 சதவிகித நிதியை  தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைக்க நினைக்கிறது. மாநிலங் களை தங்களை சார்ந்து இருக்க வைப்பதற்காக, அனைத்து பின் கதவுகளையும் ஒன்றிய அரசு பயன் படுத்துகிறது. சுதந்திரமாக முடிவுகள் எடுப்பதை அது விரும்பவில்லை. அதனா லேயே மாநில விவகாரங்களில் தலையிடுகிறார்கள். நாங்கள் கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்து கிறோம். பெரிய நாடுகள், மாநிலங்கள், மாவட்ட நிர்வாகங்கள், பஞ்சாயத்துகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி யுள்ளன. ஆனால், கடன் பெறுவது, நிதி செலவீடுகள் தொடர்பான அதிகாரங் களைக் கூட  ஒன்றிய அரசே கைப்பற்ற முயற்சித்து வருகிறது.

 இவ்வாறு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.


No comments:

Post a Comment