உடலில் கடைசிச் சொட்டு குருதி உள்ளவரை பா.ஜ.க.வை எதிர்த்து போராடுவேன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 29, 2022

உடலில் கடைசிச் சொட்டு குருதி உள்ளவரை பா.ஜ.க.வை எதிர்த்து போராடுவேன்!

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

ராஞ்சி, ஆக.29- எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக சதி  செய் வது, சிபிஅய், அமலாக்கத்துறைகளை ஏவி  மிரட்டுவது, சட்டமன்ற உறுப் பினர்களை வளைத்து, சம்பந்தப் பட்ட கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் கவிழ்ப்பது என்பதை பாஜக தனது முழு நேர வேலையாக வைத்திருக்கிறது. இதன்மூலம் நாட் டின் ஜனநாயகத்தையும், கூட் டாட்சித் தத்துவத்தையும் அடி யோடு அழித்து வருகிறது. 

அண்மையில், மகாராட்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி அரசைக் கவிழ்த்த பாஜக, தற்போது பார் வையை ஜார்க்கண்ட் மாநிலத்தின் பக்கம் திருப்பியுள்ளது. ஜார்க் கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தலைநகர் ராஞ்சியில் தனது பெயரிலான 0.88 ஏக்கர் பரப்பு கல்குவாரியின் குத்தகையை புதுப் பித்தது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 9(ஏ)-அய் மீறியது என்று கலகத்தை ஆரம்பித்த பாஜக தலைவர் ரகுபர்தாஸ், அதுதொடர் பான ஆவணங்கள் என்ற பெயரில் சிலவற்றை வெளியிட்டிருந்தார்.

தேர்தல் ஆணையமும் இதனை ஏற்றுக் கொண்டு,  முதலமைச்சர் ஹேமந்த் சோரனை சட்டமன்ற உறுப்பினர்  பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யுமாறு ஆளு நர் ரமேஷ் பாய்ஸூக்கு கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி கடிதம் அனுப்பியது. முதலில், ஹேமந்த் சோரனின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பது, பின்னர் தார்மீக அடிப் படையில் சோரனை முதலமைச்சர் பதவியிலிருந்தும் விலக வைத்து, ஆட்சியைக் கவிழ்ப்பது  என்பதே பாஜகவின் திட்டமாகும். அந்த வகையில், சோரனை சட்டமன்ற உறுப்பினர்  பதவியிலிருந்து தகுதி  நீக்கம் செய்யும் உத்தரவை ஆளுநர் ரமேஷ் பாய்ஸ்  இந்திய தேர்தல் ஆணை யத்திற்கு (ECI) அனுப்புவார் என செய்திகள் வெளியாகின. இதனால் சுதாரித்துக் கொண்ட முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தனது ஜார்க்கண்ட் முக்தி  மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் உள் ளிட்ட கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை தனது இல்லத்திற்கு வரவழைத்து அவர்  களுடன் நீண்ட ஆலோசனை நடத்தினார். அதன்முடிவில், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிடமிருந்து பாதுகாக்கும் விதமாக, அவர்  கள் அனைவரையும் ஒரே இடத்தில் தங்க  வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கினார்.  கூட்டத் திற்கு  வரவழைத்திருந்த ஹேமந்த் சோரன், கூட்டம் முடிந்ததும், அவர்களை பேருந்துகளில் ஏற்றி  பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத் தார்.

அவர்கள் ராஞ்சியில் இருந்து சுமார் 30 கிமீ  தொலைவில் உள்ள குந்தியில் தங்கவைக்கப் படலாம் அல்லது, நட்புக் கட்சிகள் ஆளும் மேற்கு  வங்கம் அல்லது சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும்  இந்தப் பயணத்தில் 43 சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றிருப் பதாக கூறப்படுகிறது. 81 உறுப்பி னர்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் ஆளும் கூட் டணிக்கு 49 சட்டமன்ற உறுப் பினர்கள் உள்ளனர். இதில் பெரிய கட்சி யான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 30 சட்டமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸுக்கு 18 சட்டமன்ற உறுப்பினர்களும், தேஜஸ்வி தலைமையிலான ராஷ்டி ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப் பினர்களும்  உள்ளனர். எதிர்க் கட்சியான பாஜகவுக்கு 26 சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆளும் கூட்ட ணிக்கு 50 சட்டமன்ற உறுப்பினர்கள் (பேரவைத் தலைவர் உட்பட)  உள்ளதாக அமைச்சர் மிதிலேஷ் தாக்குர் தெரி வித்துள்ளார்.

இதனிடையே, லதேஹரில் நடைபெற்ற அரசு  விழாவில் உரை யாற்றிய முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தனக்கு மாநிலத்தை ஆளும் ஆணை,  மக்களால் வழங்கப்பட்டுள்ளதே தவிர, தனது எதிரிகளால் அல்ல என்று பேசி யுள்ளார். இங்கு சுமார் 231 கோடியே 27 லட்சம் ரூபாய்  மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி ஹேமந்த் சோரன் மேலும் பேசிய தாவது: “எங்களுடன் அரசியல் ரீதியாக போட்டி யிட முடியாமல், நமது எதிர்ப்பாளர்கள் அரசமைப்பு நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துகின்றனர். அமலாக் கத்துறை, மத்திய புலனாய்வுக் கழகம், மற்றும் வருமான வரித்துறை யை பயன்படுத்தி எங்கள் அரசாங் கத்தை சீர் குலைக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளாக மாநிலம் கரோனா பாதிப்புகளைச் சந்தித் தது. இப்போது,  வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்தும் போது, பாஜகவினர் மாநிலத்தின் வேகத்தை தடுக்க, தங்கள் ஓட்டை களை  விட்டு வெளியேறுகின்றன. அத்தகைய சக்திகள்  எதையும் செய்ய முடியும். ஆனால், நான் மக்க ளுக்கு நன்மை செய்வதை ஒரு போதும் தடுக்க  முடியாது. நான் ஒரு பழங்குடி மகன். பழங்குடி யின் டிஎன்ஏ-வில் பயம் இல்லை. என் உடலில்  கடைசி சொட்டு குருதி இருக்கும் வரை போராடுவேன். நாங்கள் அதிகாரப் பசியில் இல்லை, மக்கள்  நலனுக்காக மட்டுமே நாங்கள் அரசியல் சாசன  அமைப் பின் கீழ் இருக்கிறோம். முதியவர்கள், விதவைகள் மற்றும் தனித்து வாழும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஓய்வூ தியம் கிடைக்கும் என்று யாராவது நினைத்தது உண்டா? ஜார்க்  கண்ட் மக்களின் ஆசீர்வாதத்தால் ஜார்க் கண்டின் மகனால் இது சாத்திய மானது.

ஜார்க்கண்ட் ஏழை மாநிலமாக இருப்ப தால், மாநில மக்களுக்கு ஓய்வூதியம் வழங்கு வதற்கு அதிக நிதியை அனுமதிக்குமாறு நான்  ஒன்றிய அரசை வலியுறுத்தினேன். ஆனால்,  அவர்கள் அனுமதிக்க வில்லை. கடந்த 20 ஆண்டுகளாக ஜார்க்கண்ட் மாநிலத்தை அழிக்க இந்த  (பாஜக) கும்பல் வேலை செய்தது. 2019-இல்  மக்களால் தூக்கியெறியப்பட்டதை சதிகாரர் களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எங்கள் ஆட்சி தொடர்ந்து நீடித்தால், அவர்கள்  எதிர்காலத்தில் கஷ்டப்படுவார்கள் என்று கருது கிறார்கள். உலக பழங்குடியினர் தினத்தன்று (ஆகஸ்ட் 9), நாட்டின் பிரதமரும், பழங்குடி  வகுப்பைச் சேர்ந்த குடியரசுத் தலைவரும் நாட்  டின் பழங்குடி சமூகத்திற்கு நல்வாழ்த்துக்  களைத் தெரிவித்ததை நான் பொருத்தமான தாகக் கருதவில்லை என்பது கெட்ட வாய்ப்பானது.  அவர்களின் பார்வையில் நாம் பழங் குடியினர் அல்ல, ‘வனவாசி களாகவே’ இருக்கிறோம். இவ்வாறு ஹேமந்த் சோரன் பேசியுள்ளார்.

No comments:

Post a Comment