ஊழியம் செய்யும் ரோபோக்கள் கூகுள் அசத்தல் முயற்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

ஊழியம் செய்யும் ரோபோக்கள் கூகுள் அசத்தல் முயற்சி!

கூகுள் நிறுவனம் தொழில்நுட்பத்தின் ஜாம்பவான் என்றே கூறலாம். புது புது தொழில்நுட்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவியல்  (Artificial Intelligence) தொழில்நுட்பங்களுடன் கூடிய ரோபோட்டை உருவாக்கி உள்ளது. இந்த ரோபோ ஊழியர்களுக்கு காபி, சிப்ஸ் போன்ற உணவுகளை உணவறையிலிருந்து எடுத்து கொடுத்து உதவுகின்றன. ஊழியர்கள் தங்கள் ஓய்வுநேரத்தில் கேட்கும் உணவுகளை எடுத்து கொடுத்து உதவுகின்றன.

ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் உள்ள இந்த ரோபோ உரையாடல் திறன் உடையது. கண்கள் மற்றும் கைகளை கொண்டு இந்த ரோபோட்கள் உணவக வெயிட்டர்கள் போல செயல்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப் பட்டுள்ள இந்த ரோபோட்களுக்கு தகுந்த பயிற்சிகள் அளிக் கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்த கூகுள் ரோபோட்கள் விற்பனைக்கு இல்லை என்றும். விற்பனைக்கு தயாராக இல்லை என்றும் கூறியுள்ளது. இந்த ரோபோட்கள் சில எளிய செயல்களை மட்டுமே செய்து வருகின்றன. மைக்ரோசாஃப்ட், அமேசான் ஆகியவை ரோபோட்கள் தொடர்பான ஆகியவை ரோபோட்கள் தொடர்பான ஆராய்ச்சியை மேற் கொண்டு வருகின்றனர்.

கூகுள் ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சியின் மூத்த இயக்குநர் வின்சென்ட் வான்ஹூக் கூறுகையில்,  "ரோபோட்கள் நம் கட்டளைகளை ஏற்று நடக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. அதனுடைய உள்ளீடுகளுக்கு (இன்புட்) திறமைக்கு ஏற்ற வாறு செயல்படுகிறது.

விக்கிப்பீடியா, சமூக ஊடகங்கள் மற்றும் பிற வலை தளங்களிலிருந்து உலகத்தை பற்றிய அறிவு மற்றும் புரிதலை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இதுபோன்ற ரோபோட்கள் பயன்படுத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment