இன்று (29.8.2022) காலை ‘விடுதலை' ஆசிரியரான தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு, அவரது ஆசிரியர் பணியேற்று 60 ஆண்டுகள் ஆகியமைக்காக - தனது இதயமார்ந்த வாழ்த்துகளைத் தொலைப்பேசியில் அழைத்து வழங்கினார்கள் மகாசந்நிதானம் தவத்திரு (குன்றக்குடி) பொன்னம்பல அடிகளார் அவர்கள்.
அவர்களுக்கு தனது உளர்ப்பூர்வ நன்றியைக் கூறினார் ‘விடுதலை' ஆசிரியர், மகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சமூகம், கூறிய அரிய அறிவுரையான ‘‘தமிழர் இல்லம் என்பதற்கான அடையாளம் அங்கே ‘விடுதலை' நாளேடு இருப்பதுதான்'' என்று ‘விடுதலை' புதுமனை திறப்பு விழாவில் தந்தை பெரியார்முன் பிரகடனப்படுத்தியதை ஆசிரியர் நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்!

No comments:
Post a Comment