88 ஆண்டு விடுதலை ஏட்டின் 60 ஆண்டு கால ஆசிரியருக்கு பாராட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

88 ஆண்டு விடுதலை ஏட்டின் 60 ஆண்டு கால ஆசிரியருக்கு பாராட்டு விழா

பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்பு

சென்னை, ஆக. 28- தந்தைபெரியார் கொள்கை வழியில் தடம் மாறாமல் 88 ஆண்டுகளாக வீறு நடைபோட்டுவருகின்ற விடுதலை நாளேட்டின்  60 ஆண்டு  காலம் தொடர்ந்து ஆசிரி யராக பணியாற்றிவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பாராட்டு விழா  27.8.2022 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத் தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சியினருக்கும், பத்திரிகை உலகிலும், சமுதாயப் பணியிலுள்ள அனைவருக்கும் ஆசிரியர் என்றால் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தான். அனைத்து தரப் பினரும் அன்போடு Ôஆசிரியர்Õ என்றே அழைத்து வருகின்றனர். 

விழாவில் தந்தைபெரியார் வழியில் அயராது தொண்டாற்றி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பணிகளை பாராட்டி பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் உணர்ச்சிபூர் வமாக உரையாற்றினார்கள்.

திராவிடர் கழக மேடைகளில் தந்தைபெரியார் கொள்கை களை  பகுத்தறிவுக் கருத்துகளை முழங்கி வந்த கடலூர் சிறுவன் வீரமணி அறிஞர் அண்ணாவால் திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என்று பாராட்டப்பட்டார். தந்தைபெரியாரின் நேரடி அறிமுகம் சிறு வயதிலேயே ஏற்பட்டு இன்று 89 வயதிலும் ஓய்வு, சலிப்பின்றி தந்தைபெரியார் வழியில்  அருந்தொண்டாற்றி வருகிறார்.

அடையாளம் கண்டு விடுதலை நாளேட்டின் ஆசிரியராக பொறுப்பேற்கச் செய்த தந்தைபெரியாரின் தொலைநோக்கு, தமிழர் தலைவர் மீது அவர் வைத்த நம்பிக்கையை வெளிப் படுத்தும் விதமாக விடுதலை நாளேடு இடைவிடாமல்  வெளி வருவதுடன் தந்தைபெரியார் கொள்கைவழியில் 88ஆம் ஆண் டில் வீறுநடைபோட்டு வருகிறது.

88ஆண்டு விடுதலையின் 60 ஆண்டு கால ஆசிரியர் பணியை தொடர்ச்சியாக ஆற்றிவரும் தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்களைப் பாராட்டி, நன்றிப் பெருவிழாவாக விடுதலை குழுமம் சார்பில் விடுதலையின் நிர்வாக ஆசிரியர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நேற்று (27.8.2022) நடைபெற்றது.

விழாவில் ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆங்கில மாத இதழின் பொறுப்பாசிரியரும் கழகப்பொருளாளருமான வீ.குமரேசன் அனைவரையும் வரவேற்றார்.

விடுதலை நிர்வாக ஆசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையுரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் குடும்பத்திலிருந்து தொடங்கி நன்றியறிதலை நீண்ட பட்டி யலுடன் தெரிவித்தார். 

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அண்ணார் கடலூ ரில்  திமுகவில் 25 ஆண்டுகள் தொடர்ந்து நகரப்பொறுப்பேற்று   வெள்ளிவிழா கொண்டாடியவர் கி.கோவிந்தராஜன் அவர்கள் சிறுவன் வீரமணியை திராவிடர் கழக மேடைகளில் பகுத்தறிவு முழக்கங்களை  ஊர்தோறும் முழங்கிட அனுப்பிவைத்து அனைத்து வகையிலும் உதவியவர். மாணவன் வீரமணிக்கு பகுத்தறிவு, தந்தைபெரியார் கொள்கைகளை ஊட்டிவளர்த்த வரான ஆசிரியர் திராவிட மணி, கடலூர் வருகைதந்த  தந்தை பெரியாரிடம் சிறுவன் வீரமணியை அறிமுகப்படுத்திவைத்த டார்ப்பீடோ ஜனார்த்தனம்,  பெறாத பிள்ளையாக பாசம் காட்டி யவர் அன்னை மணியம்மையார், 10 வயது சிறுவனாக இருந்த மாணவனை அடையாளம் கண்டு நமக்கு ஆசிரியரை அளித்த தந்தைபெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் மாமனார், மாமியார், ஆசிரியர் அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் மோகனா அம்மையார் உள்ளிட்ட ஏராளமானவர் களைக் குறிப்பிட்டு அத்துணைபேருக்கும் விடுதலை குழுமம் சார்பில் விழாவில் தலைமையுரையாற்றிய கவிஞர் அவர்கள் நன்றி தெரிவித்தார். 

அண்ணமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அவர்கள் படித்தபோது சிதம்பரம் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அளிக் கப்படும் தங்க மெடலையும் பெற்றவர் ஆசிரியர் அவர்கள். 1935இல் திருச்சியில் கைம்பெண் மணத்தை தந்தைபெரியார் நடத்திவைத்தார். ஆசிரியர் அவர்களின் மாமனார், மாமியார் அவர்கள்தான்.

 ஆசிரியர் அவர்களின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக இருப்பவர் அவர் வாழ்க்கைத் துணைவியார்  மோகனா அம்மையார். தந்தைபெரியார்தான் ஆசிரியர் அவர்களுக்கும் திருமணத்தை நடத்திவைத்தார்.

கடலூரில் வழக்குரைஞராக பணியாற்றிய ஆசிரியரை தந்தைபெரியார் அழைத்து விடுதலையின் ஆசிரியராக பொறுப் பேற்கச் செய்தார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. சந்தாக் கள் வழங்கும் விழா செப்டம்பர் 6இல் நடைபெறுகிறது. ஆசிரியர் அவர்களுடன் 45 ஆண்டு காலம் நான் பயணித்துள்ளேன். எனக்கு இந்த விழாவில் தலைமையேற்கும் வாய்ப்பு அளித்த மைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் கவிஞர் கலி.பூங்குன்றன் தனது தலைமையுரையில்,

விழாவுக்கு முன்னதாகவே வந்து அமர்ந்திருந்தார் ஆசிரியர் அவர்களின் கல்லூரி கால நண்பரும், காங்கிரசு கட்சி மூத்த தலைவருமான  குமரி அனந்தன். அவர் பேசக்கூடாது என்ற மருத்துவர்களின் அறிவுறுத்தலால், கடிதத்தை அளித்தார். அக்கடிதத்தில் ஆசிரியருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு பாராட்டு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனசக்தி இதழின் ஆசிரியருமாகிய தோழர் கே.சுப்பராயன், விடுதலை இதழின் மூத்த வாசகர் திமுக மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், மூத்த பத்திரிகையாளர் ஃபிரண்ட் லைன் இதழின் மேனாள் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர், நக்கீரன் ஆசிரியர் கோபால், கலைஞர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன், தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், முதல் குரல் எழுத்தாளர் ஓவியா ஆகியோருக்கு விடுதலை நிருவாக  ஆசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன்  பயனாடை அணி வித்து புத்தகங்களை பரிசளித்தார்.

பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஆசிரியர் அவர்களின் நண்பர் குமரி அனந்தன் அவர்களுக்கு ஆசிரியர் அவர்கள் மேடையிலிருந்து இறங்கி வந்து பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தவரான காரைக்குடி சுயமரியாதைக் குடும்பத்தவரான இராம சுப்பையா மகன் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அவர்களுக்கும்  ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு, விழுப்புண்களை ஏற்ற விடுதலை வீர வரலாறு,  எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய தமிழ் இன, மொழி காவலர் கி.வீரமணி ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர் அவர்களுக்கு திண்டிவனம் சிறீராமுலு பயனாடை அணிவித்தார்.

விழாவில் எழுத்தாளர் ஓவியா, தீக்கதிர்ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், நக்கீரன் கோபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனசக்தி ஆசிரியருமான கே.சுப்பராயன், கலைஞர் தொலைக்காட்சி தலைமை செய்தி ஆசிரியர் எழுத்தாளர் ப.திருமாவேலன், மூத்த பத்திரிகையாளர் ஃபிரண்ட்லைன் இதழின் மேனாள் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர், விடுதலை ஏட்டின் மூத்த வாசகர் திமுக மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் ஆகியோர் ஆசிரியர் அவர்களுடன் தங்களின் அனுபவத்தைக் குறிப்பிட்டு, தந்தைபெரியார் கொள்கைவழியில் தம்மையே ஒப்படைத்துக்கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இன்றியமையாத பணிகளை, தொடரவேண்டிய அவசியத்தை, அனைத்து தரப்பினருக்கும் வழிகாட்டும் நிகரற்ற தலைவராக விடுதலை இதழின் ஆசிரியர்தம் பணிகளைத் தொடர வேண்டும் என்று விருப்பத் துடன் உணர்வுபூர்வமாக குறிப்பிட்டனர்.

நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.

விழா நிறைவாக ‘விடுதலை' நாளிதழின் தலைமைச் செய்தியாளர் வே.சிறீதர் நன்றி கூறினார். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். விழாவில் அனைவருக்கும் இனிப்பும் காரமும் விடுதலைக் குழுமம் சார்பில் வழங்கப்பட்டது. விழாவில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் உ.பலராமன், புலவர் பா.வீரமணி, கவிஞர் கண்மதியன், த.கு.திவாகரன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், கழகப்பொதுச்செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், அமைப்பாளர் இரா.குண சேகரன், திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீர சேகரன், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, சி.வெற்றிசெல்வி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் மேனாள் செயலாளர் ம.செல்வராஜ், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன், புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ் செல்வன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் 

ஆ.வெங்கடேசன், மருத்துவர் மீனாம்பாள், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாணவர் கழக அமைப்பாளர செந்தூர் பாண்டியன், தொழிலாளர் கழகம் திருச்சி சேகர், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், பெரியார் மாணாக்கன், இராமலிங்கம், தாம்பரம் இரத்தினசாமி, ப.முத்தையன், கோ.நாத்திகன், தென்சென்னை இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, எண்ணூர் மோகன், நெய்வேலி ஞானசேகரன், மயிலாடுதுறை கி.தளபதிராஜ், காரைக்குடி தி.என்னாரெசு பிராட்லா, இளைஞரணி சோ.சுரேஷ், தளபதி பாண்டியன், புரசை அன்புசெல்வன், உடுமலை வடிவேல், சென்னை பத்திரிகையாளர் சங்க (விஹியி) பொதுச் செயலாளர் வை.மணிமாறன், செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், பத்திரிகையாளர்கள் கோவி.லெனின், அண்ணா துரை, பாலு தென்னவன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment