60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 29, 2022

60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு. சண்முகபிரியன், தென்சென்னை இளைஞரணி செயலாளர் ந. மணிதுரை ஆகியோர் வி.ஜி.பி. நிறுவனத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் அவர்களை நேரில் சந்தித்து 60000 விடுதலை சந்தாக்கள் வசூலிப்பதை விவரமாக எடுத்துரைத்தனர். விடுதலை சந்தா அவசியம் நான் கொடுக்க வேண்டும் என தெரிவித்து விடுதலை சந்தா தொகை ரூ.25,000 வழங்கினார். இயக்க நூல்களை வழங்கி நன்றி தெரிவித்தனர்.

குழந்தைகள் நல மருத்துவர் திட்டக்குடி செந்தில்குமார் தமிழர் தலைவரை சந்தித்து 3 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.6000அய் வழங்கினார். தமிழ்நாடு முற்போக்கு வழக்குரைஞர் சங்க பொதுச்செயலாளர் மார்க்ஸ் ரவீந்திரன் மற்றும் தாயுமானவர் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து 1 விடுதலை சந்தா வழங்கினர். வழக்குரைஞர்கள் தோழர் துரை அருண், தோழர் தளபதி பாண்டியன் ஆகியோர் 3 விடுதலை சந்தாக்கள் வழங்கினர். (27-08-2022, பெரியார் திடல்) திருப்பூர் அரசு வழக்குரைஞர் அ.வே.விவேகானந்தன் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் யாழ். ஆறுச்சாமி, தாராபுரம் மாவட்ட துணைத்தலைவர் முத்து.முருகேசன், மைனர் ஆகியோரிடம் விடுதலை சந்தா வழங்கினார் (29-08-2022) 

கா.புதூர் லாரி உரிமையாளர் அ.அப்பர் அரையாண்டு சந்தா மற்றும் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி செயலாளர் தனசேகர் ஓர் ஆண்டு விடுதலை சந்தாக்களை தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு இராமலிங்கத்திடம் வழங்கினர். மருத்துவர் இளமதி ராதா, தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோரிடம் 'விடுதலை' நாளேட்டிற்கு இரண்டு ஆண்டு சந்தாக்களை வழங்கினார் (26.08.2022). கொ.இரமேஷ் (திமுக) ஓராண்டு  விடுதலை சந்தா தொகை ரூ.2000த்தை மா.செல்லதுரை இளைஞரணி மாநில துணை செயலாளர், மா.முனியப்பன் கர்நாடக மாநில மாணவர் கழக தலைவர் ஆகியோரிடம் வழங்கினார்.


கன்னியாகுமரிக்கு வருகை தந்த கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.  குணசேகரனிடம் விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.13000அய் குமரிமாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் வழங்கினர். திருவள்ளூர் மாவட்டம், வெங்கத்தூர் கிராமத்தைச் சார்ந்த, சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் ஆர்.சசிக்குமார் ஓராண்டு விடுதலை சந்தாவினை கழக மாவட்ட துணை செயலாளர் இரா.ஸ்டாலினிடம் வழங்கினார். இலால்குடி மாவட்ட செயலாளர் அங்கமுத்து, மண்டல இளைஞரணி செயலாளர் வீ.அன்புராஜா, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் சண்முகம், மண்ணச்சநல்லூர் நகரத் தலைவர் முத்துசாமி, மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் பாலசந்திரன், இலால்குடி ஒன்றிய செயலாளர் பிச்சைமணி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பெருவளப்பூர் வீரமணி ஆகியோர் விடுதலை சந்தா ரூ 33, 200அய் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்.

இலால்குடி மாவட்டச் செயலாளர் அங்கமுத்து, மண்டல இளைஞரணி செயலாளர் வீ.அன்புராஜா ஆகியோர் விடுதலை சந்தாவை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். கரூர் மாவட்டத் தலைவர் ப.குமாரசாமி, மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் உ.வைரன், நகர செயலாளர் க.நா.சதாசிவம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ். குமார், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் நைஸ் சபாபதி, மாணவர் கழக தமிழ்செல்வன் ஆகியோர் விடுதலை சந்தா ரூ 15,950அய் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்கள் (28.8.2022). தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ‌நல ஆணைய உறுப்பினர் வழக்குரைஞர் பொ.இளஞ்செழியன், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகனிடம் விடுதலை சந்தா வழங்கினார். உடன்: திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர் பேராசிரியர் பாபு.

தாராபுரம் மாவட்ட த் தலைவர் கணியூர் கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சக்திவேல், மண்டல இளைஞரணி செயலாளர் முனீஸ்வரன், மாரியப்பன், மாரிமுத்து, சித்திக் ஆகியோர் சந்தா ரூ.4,650அய் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார் (28-08-2022). பகுத்தறிவு கலைத்துறை மாநில செயலாளர் மாரி கருணாநிதியிடம் மோளையானூர் ஊராட்சி மன்ற தலைவர் துரை பாண்டியன் மற்றும் வெங்கட சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் மலர் மாரப்பன் ஓராண்டு சந்தாக்களை வழங்கினார். தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் எம்.பி.பாலு அவர்களை உடல் நலன் விசாரிக்க சென்றபோது மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ. ராகவன் ஆகியோரிடம் விடுதலை நாளேட்டிற்கு ஓராண்டு சந்தா மற்றும் அரையாண்டு சந்தா ஒன்றும் வழங்கினார். (25.08.22).

No comments:

Post a Comment