இந்தியாவிற்கும் வந்தது 5 ஜி தொழில்நுட்பம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

இந்தியாவிற்கும் வந்தது 5 ஜி தொழில்நுட்பம்

இந்தியாவில் 5 ஜி தொழில் நுட்பம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது . இந்நிலையில் இந்தியா வில்  5ஜிக்கான தேவை குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங் கள் இருக்கிறது.

குறைந்த கட்டணத்தில் நெட்வெர் சேவை கிடக்கவும். அதேவேளையில் தரமான பேண்ட்  வித் (band width)  கிடைக்கவும், நல்ல வேகமாக நெட் வொர்க் கிடைக்கவும் 5 ஜி தொழில் நுட்பம் தேவைப்படுகிறது. கேஜட்ஸ் சந்தையில் 5 ஜி போன்களின் விற் பனை தொடங்கிய நிலையில், கேஜட்ஸ் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் இதை வாங்க தொடங்கி உள்ளனர்.

5 ஜி பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பாக நாம் தெரிந்துகொள்ள வேண் டியது அதற்கு முன்பாக வந்த நெட் வொர் பற்றித்தான்.

1 ஜி- 1980களில் வெளிவந்தது. இதன் மூலம் அனலாக் வாய்ஸ் (analogue voice)  கொண்டு வரப்பட்டது

2ஜி- 1990களில் வெளிவந்தது. இதன் மூலம் டிஜிட்டல் வாய்ஸ் சிடி எம்ஏ (CDMA) கொண்டுவரப்பட்டது.

3ஜி- 2000ஆம் ஆண்டில் வெளி வந்தது. மொபைல் டேட்டா மற்றும் முக்கியமான சேவைகள் வழங்கப் பட்டன.

4ஜி- 2010ஆம் ஆண்டில் வெளி வந்தது. திறன்பேசி (ஸ்மார்ட் போன்), மொபைல் பிராட்பாண்ட் கொண்டு வரப்பட்டது.

5 ஜி- இந்த 4 நெட்வொர் ஒரு கிணைந்த சேவையையும், அதிவேக பதிவிறக்கம், விரிச்சுவல் ரியாலிட்டி, செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபி ஷியல் இன்டெலிஜென்ஸ்( ஆகிய வற்றை தருகிறது 5ஜி.

13 நகரங்களில் அடுத்த மாதம் 5 ஜி நெட்வொர் சேவை தொடங்கும் என்று  தகவல் தொழில்நுட்ப துறை கூறி யுள்ளது.

No comments:

Post a Comment