அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவு

புதுடில்லி, ஆக.27-  அரசியல் கட்சிகள் தேர்தல் பரப் புரையில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.  

தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள், இலவச அறிவிப்புகளை வெளி யிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி பாஜகவைச் சேர்ந்த வழக்குரைஞர் அஷ்வினி  உபாத் யாய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை அமர்வு விசா ரித்து வந்தது. இந்நிலையில், வியாழனன்று நடைபெற்ற அமர்வில் இவ்வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப் படுவதாக தலைமை நீதிபதி ரமணா கூறியிருந்தார்.  

இந்நிலையில், நேற்று (26.8.2022) நடைபெற்ற விசாரணையின்போது, இவ்வழக்கில் கட்சிகள் எழுப்பும் பிரச்ச னைகளுக்கு விரிவான விசாரணை தேவைப் படுவதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். இதில் நீதித்துறை தலையீட்டின் நோக்கம் என்ன? நீதிமன்றம் மூலமாக நிபுணர் குழுவை நியமிப்பதில் உள்ள சாதக - பாதகங்கள் போன்ற அடிப்படை விஷயங்கள் தீர்மா னிக்கப்பட வேண்டும் என்றும் ரமணா குறிப்பிட்டார். 

இந்தப் பிரச்சினையில் இலவச அறிவிப்புகளுக்கு எதிரான மனுதாரர்கள் குறிப்பிட்டிருப்பது போல, இலவசங்களை அறிவிப்பது என்பது ஓர் ஊழல் நடை முறை அல்ல என தலைமை நீதிபதி குறிப்பிட்டார். எனினும் மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் நிதி பொறுப்பு ஏதும் இல்லாமல் அறிவிப்புகள் வெளியிடு வது பற்றி கட்சிகள் யோசிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு இலவசங்கள் அறிவிப்புக்கு தடைகோரும் வழக்கினை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக கூறிய  தலைமை நீதிபதி ரமணா, வழக்கு விசார ணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்  ளார். இந்த வழக்கினை இனி நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு விசாரிக்கும் என்று தெரிகிறது.


No comments:

Post a Comment