150 நாட்கள் ராகுல் நடைப்பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

150 நாட்கள் ராகுல் நடைப்பயணம்

நாகர்கோவில், ஆக.27 கன்னியா குமரியில் இருந்து காஷ்மீருக்கு நடைப்பயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப் பினர் ராகுல்காந்தி, குமரியில் செப். 7-ஆம் தேதி பயணத்தைத் தொடங்குகிறார்.

இதற்காக வரும் 7-ஆம் தேதி காலைசென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னி யாகுமரி வருகிறார். மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசும் ராகுல் காந்தி, பின்னர் நடைப்பயணத்தை தொடங்கு கிறார். அன்று இரவு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி யில் தங்குகிறார்.

செப். 8-ஆம் தேதி காலை அகஸ்தீஸ்வரத்தில் இருந்து கொட்டாரம், பொற்றையடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம் வழி யாகச் சென்று, மாலையில் நாகர்கோவில் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் நிறைவு செய்கிறார். 9-ஆம் தேதி காலை பார்வதிபுரம், சுங்கான்கடை வழியாக புலியூர் குறிச்சி, தக்கலை வழியாகச் சென்று முளகுமூடு புனிதமேரி பள்ளியில் தங்குகிறார்.

செப். 10-ஆம் தேதி காலை சாமியார்மடம், மார்த்தாண்டம், குழித்துறை, படந்தாலுமூடு வழி யாக தலைச்சன்விளை சென்று, இரவு செருவாரகோணம் பள் ளியில் தங்குகிறார். செப். 11-ஆம் தேதி முதல் கேரளத்தில் அவரது சுற்றுப்பயணம் தொடங்குகிறது.தொடர்ந்து, 12 மாநிலங்கள் வழியாக மொத்தம் 150 நாட்கள், 3,570 கி.மீ. தொலைவு நடைப்பயணம் மேற் கொண்டு, காஷ்மீர் செல் கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல்காந்தி நடைப்பயண ஏற் பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நாடா ளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி, மேலிடப் பொறுப்பாளர் வல்லபபிரசாத் உள் ளிட்டோர் செய்து வருகின் றனர்.


No comments:

Post a Comment