மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரியார் 1000 தேர்வில் இந்த ஆண்டு 2302 மாணவர்கள் பங்கேற்றனர். ஆகஸ்டு 24 மற்றும் 25ஆம் தேதிகளில் 2000 பேர் தேர்வு எழுதினர். இன்று 29ஆம் தேதி 302 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர் என்று மவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பெரியார் 1000
சேலத்தில் பெரியார் 1000 வினா - விடை போட்டி தேர்வினை கழக மாவட்ட தலைவர் அ.ச. இளவழகன் தொடங்கி வைத்து தேர்வின் நோக்கம் மற்றும் தந்தை பெரியாரின் தொண்டால் பெண்ணினம் அடைந்த முன்னேற்றம் குறித்தும் எடுத்துக்கூறி வாழ்த்துரை வழங்கினார்.
சுயமரியாதையாளர் சோ.ராமமூர்த்தி முதலாமாண்டு நினைவு நாளில் அவர் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பேத்தி விஷ்ணு வர்சினி, பேரன் கவின் குமார் ஆகியோருடன்.துணைவியார் முத்துராணி ஓராண்டு விடுதலை சந்தாவை மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வத்திடம் வழங்கினர்.


No comments:
Post a Comment