மேட்டுப்பாளையம் மாவட்டம் பெத்திக்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி இரும்பொறை, மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம் நகரவை மேல்நிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகளில் பெரியார்-1000 தேர்வு நடைபெற்றது.
அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் பெரியார்-1000
பெரியார்-1000 தேர்வு 24.8..2022 அன்று காலை 11 மணியளவில் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியம் கோவிலூரில் பெரியார்-1000 தேர்வு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தொடங்கி வைக்க சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளி, தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, செய்ன்ட். சேவியர் உயர்நிலைப் பள்ளி, சிறீநடராஜர் நடுநிலைப் பள்ளி, கெடார் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எசாலம் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்(நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) மற்றும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பாக பெரியார்-1000 வினா-விடை தேர்வு சிறப்பாக 22.8.2022 அன்று நடந்தது. தேர்வினை பெரியார் மணியம்மை பல்கலைகழக பேராசிரியர் சீனுவாசன், மாவட்ட கழக தலைவர் ப.சுப்பராயன், மாவட்ட இளைஞரணித்தலைவர் அ.சதீஷ், நகரச்செயலாளர் ச.பழனிவேல் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். உடன் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மேற்பார்வை செய்தனர். இத்தேர்வில் சுமார் 750 மாணவர்கள் பங்குபெற்றனர்.



No comments:
Post a Comment