காட்டுமன்னார்குடி ஒன்றியத்தில் பெரியார்-1000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

காட்டுமன்னார்குடி ஒன்றியத்தில் பெரியார்-1000

காட்டுமன்னார்குடி ஒன்றியத்தில் திருமுட்டம் பகுதியில் பெரியார் 1000 வினா-விடைத் தேர்வு போட்டியை 24.08.2022 காலை 11 மணியளவில் திருமுட்டம் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளித் தலைமையாசிரியர் குமரேசன் தொடங்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட கழகத் துணைத் தலைவர் மழவை கோவி.பெரியார்தாசன், ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் அ.செங்குட்டுவன், ஆசிரியர் சின்னப்பன். அரசு.மே.நி.பள்ளி உதவி தலைமையாசிரியர் பொன்மணி, பட்டதாரி ஆசிரியர் மா.ஜவகர்நாராயணசாமி, வலசை அ. வீரமணி, மாவட்ட கழக இ.செயலர் சிற்பிசிலம்பரசன் உள்ளிட்ட ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். கிராமப்புறங்களிலிருந்து வருகை தந்த மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு எழுதினர். தேர்வெழுதிய மாணவச் செல்வங்களுக்கு பெரியார் பிஞ்சு இதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன. 


No comments:

Post a Comment