உயர்கல்வி தரவரிசைப் பட்டியல்: முதலமைச்சர் மகிழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

உயர்கல்வி தரவரிசைப் பட்டியல்: முதலமைச்சர் மகிழ்ச்சி

சென்னை, ஜூலை 16 தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் சென் னை அய்.அய்.டி. ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து 4-ஆவது முறையாக முதலிடத்தை பெற்றுள்ளது. 

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 கல்வி நிறுவனங்கள் முதல் 10 இடத்திற்கு வந்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

2022-ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலை ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று (15.7.2022) காணொலி வழியில் வெளியிட்டார். அதில் சென்னை அய்.அய்.டி. ஒட்டு மொத்தப் பிரிவிலும், பொறியியல் பிரிவிலும் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடத்தைப் பெற் றுள்ளது. 

பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் பெங்களூரு (indian institute of science)  முதலிடத்தைப் பெற்றுள்ளது.இதில், பல்வேறு பிரிவுகளில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 8 கல்வி நிறுவனங்கள் (பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள்) முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளன. நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங் களைத் தரவரிசைப்படுத்த தேசிய கல்வி நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு (என்அய்ஆர்எஃப்) ஏற்படுத்தப்பட்டுள் ளது. இந்த நிறுவனம் 2015-ஆம் ஆண்டுமுதல் கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் 2022-ஆம் ஆண் டிற்கான தேசிய உயர்கல்வி நிறுவனங் களின் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்கள் சிறந்த இடங்களைப் பெற்றதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் NIRF  தரவரிசைப் பட்டியல் 2022-இல் தத்தமது பிரிவுகளில் தலைசிறந்த இடங் களைப் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். 

உயர்கல்வியில் திராவிட மாடலின் மாட்சிக்கு இது ஒரு சிறந்த அங்கீகாரம்.  அதுவும் இத்தரவரிசைப் பட்டியலானது நாம் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடும் இன்று (15.7.2022) வெளியாகியிருப்பது சாலப் பொருத்த மானது. 

குறிப்பாக, இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த கல்லூரி என்ற பெரிய பெருமையை நான் பயின்ற மாநிலக் கல்லூரி பெற்றிருப்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.


No comments:

Post a Comment