தேசிய கல்விக் கொள்கையில் இந்திக்கே முன்னுரிமை மாநில கல்விக் கொள்கையை ஆளுநர் ஆதரிக்க வேண்டும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

தேசிய கல்விக் கொள்கையில் இந்திக்கே முன்னுரிமை மாநில கல்விக் கொள்கையை ஆளுநர் ஆதரிக்க வேண்டும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வலியுறுத்தல்

 சென்னை, ஜூலை 15 தமிழ்நாடு அரசு‌ கொண்டு வரவுள்ள மாநில கல்விக் கொள்கைக்கு ஆளுநர் ஆதரவு தர வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி வலியுறுத்தி யுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று (14.7.2022) செய்தியாளர்களைச் சந்தித் தார். அப்போது அவர் கூறியதாவது.

சிபிஎஸ்இ தேர்வு முடிவு தாமதம்: 

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் உயர்கல்வி சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாண வர்கள், பெற்றோர் பெரிதும் பாதிப் படைந்துள்ளனர். எனவே, மாண வர்கள் நலன்கருதி இந்த மாதத்துக்குள்‌ பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும்.

 தேசிய கல்விக் கொள்கையில் இந்தி படிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக் கும் சூழலே உள்ளது. அதனால்தான் இருமொழிக் கொள்கை போதும் என்ற நிலையில் உறுதியாக உள்ளோம்.

 நீட் தேர்வு சட்ட மசோதா ஆளுநர் மாளிகை பரிசீலனையில் உள்ளதாகக் கூறுவது புதிய தகவலாக உள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்.

மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு தற்போது வடிவமைத்து வருகிறது. இதற்கு ஆளுநர் முழு ஆதரவு வழங்க வேண்டும். இனம் மற்றும் மொழிரீதியாக எவ்வித வேறுபாடும் இல்லாமல் இருப்பதுதான் திராவிட மாடல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி படத் தெரிவித்துள்ளார். எனவே, மதவாதத்தைத் தூண்டும் வகையில் யாரும் செயல்படக் கூடாது.

இவ்வாறு அமைச்சர் க.பொன்முடி கூறினார்.

No comments:

Post a Comment