உடையார்பாளையத்தில் நடைபெற்ற கடைவீதிப் பிரச்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

உடையார்பாளையத்தில் நடைபெற்ற கடைவீதிப் பிரச்சாரம்

உடையார்பாளையம், ஜூலை 9- அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தில் மாநில இளைஞரணி மாநாட்டிற்காக துண்ட றிக்கைப் பிரச்சாரம் மற் றும் கடைவீதிகளில் நன் கொடை திரட்டும் பணி கள் 5.7.2022 செவ்வாய் மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. 

அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை. நீல மேகன் தலைமையில் மாவட்ட செயலாளர் க. சிந்தனைச்செல்வன், மண்டல தலைவர் இரா. கோவிந்தராஜன், மண் டல செயலாளர் சு.மணி வண்ணன், மண்டல இ. அ.செயலாளர் பொன். செந்தில்குமார், மாவட்ட இ.அ.தலைவர் சு.அறி வன், மாவட்ட இளைஞ ரணி செயலாளர் க.கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் க. செந்தில், மாவட்ட அமைப்பாளர் இரத்தின. இராமச்சந்திரன், மாவட்ட துணைச் செய லாளர் மா.சங்கர், மாவட்ட தொழிலாளரணி தலை வர் சி.சிவக்கொழுந்து, செந்துறை ஒன்றிய தலை வர் மு.முத்தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் ராசா. செல்வக்குமார், உள் ளிட்ட பொறுப்பாளர் கள் கடைக்கு கடை துண் டறிக்கைகளை அளித்து நன்கொடைகளைத் திரட்டினர். பிரச்சாரப் பணிகளின்போது உடை யார்பாளையத்தை சார்ந்த மணிகண்டன் என்பவர்தான் பெரியா ரியப் பற்றாளர் எனவும் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொள்ள விரும்புவதாகக் கூறினார். அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று தோழர்கள் முகவரியைப் பெற்றுக் கொண்டு துண்டறிக்கை அளித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர். 

அவரும் வருவதாக உறுதி யளித்தார். 

No comments:

Post a Comment