அரியலூரில் மாநில இளைஞரணி மாநாடு மீன்சுருட்டியில் கடைவீதிப் பிரச்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

அரியலூரில் மாநில இளைஞரணி மாநாடு மீன்சுருட்டியில் கடைவீதிப் பிரச்சாரம்

மீன்சுருட்டி, ஜூலை 9- அரிய லூர் மாவட்டம் மீன் சுருட்டியில் மாநில இளைஞ ரணி மாநாட்டு பிரச்சா ரம் மற்றும் கடை வீதிகளில் நன்கொடை திரட்டும் பணி களை பொதுச்செயலா ளர்கள் துரை.சந்திரசேக ரன், இரா.ஜெயக்குமார் இருவரும் இணைந்து தொடக்கி வைத்தனர். 

5.7.2022 செவ்வாய் மாலை 4 மணியளவில் மீன்சுருட்டி தொழிலதி பர் ராஜா. அசோகன் மாநில இளைஞரணி மாநாட்டிற்கு நன்கொடையாக கழகப் பொதுச் செயலாளர்களி டம் அளித்து மகிழ்ந்தார். 

அதேபோல் வணிகர் சங்கம் சார்பாக தொழில திபர் ராஜா.ஜெயராமன் நன்கொடையாக பொதுச் செயலாளர் துரை.சந்திர சேகரனிடம் வழங்கினார். துண்டறிக்கைகள் வழங்கி மாநாட்டிற்கு கழகத்தோழர்கள் அழைப்பு விடுத்தனர். 

சுவர் விளம்பரங்கள் சிறப் பாக இருப்பதாக வணிகர் சங்கத் தலைவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன், மாவட்ட செயலாளர் க. சிந்தனைச் செல்வன், மண்டல தலை வர் இரா.கோவிந்தரா ஜன், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், மண் டல இ.அ.செயலாளர் பொன். செந்தில்குமார், மாவட்ட இ.அ.தலைவர் சு.அறிவன், மாவட்ட துணைச்செயலாளர் மா.சங்கர், மாவட்ட தொழிலாளரணி தலை வர் சி.சிவக்கொழுந்து, மீன் சுருட்டி சேக்கிழார், புதுச்சேரி பழனி.லோகநா தன், உள்ளிட்ட பொறுப் பாளர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment