மதவெறி பிஜேபியை வீழ்த்த எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் ஒன்று திரட்டுக! : தொல் திருமாவளவன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 26, 2022

மதவெறி பிஜேபியை வீழ்த்த எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் ஒன்று திரட்டுக! : தொல் திருமாவளவன்

சென்னை, ஜூலை 26- ஒன்றிய பாஜக, சங் பரிவாரங்களின் மதவெறி அரசியலின் விபரீதங்கள் எனும் தலைப்பில் 23.7.2022 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கண்டனக் கூட்டம் தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமை மேடை ஏற்பாட்டில் நடைபெற்றது. கண்டனக் கூட்டத்தில் ஒன்றிய மேனாள் நிதியமைச்சர் காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் 

ப.சிதம்பரம், இந்து என்.ராம், சிபிஎம் ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பலரும் பங்கேற்றனர். 

அப்போது தொல்.திருமாவள வன் உரையாற்றியபோது குறிப் பிடுகையில் ‘இந்தியாவிற்கே எதி ரான கட்சி’ பாஜக என்றார். அவர் ஆற்றிய உரையிலிருந்து -

பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது அல்ல;  இந்தியாவிற்கே எதிரான கட்சி. ஆர்எஸ்எஸ்- தான் இந்தியாவை ஆட்சி செய்கிறது. பாஜக செயல் படுத்தும் அனைத்து திட்டங்களும் ஆர்எஸ்எஸ்-சின் திட்டங்களே. பாஜக இந்தியாவின் பெயரை இந்துராஷ்டிரம் என மாற்றத் துடிக்கிறது. அதற்குத் தடையாக  இந்திய அரசமைப்பு சட்டம் உள்ளது. அரசமைப்பு சட்டத்தை வைத்துக் கொண்டே, அதன் மாண்புகளை, உள்ளடக்கங் களை சிதைத்து வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து போன்றவை இதன் தொடர்ச்சிதான். சனாதனம், பிராமணியம், இந் துத்துவா. இவை அனைத்தும் ஒன்றே. ஆர்எஸ்எஸ் ஒரு பிரா மணிய சங்கம்தான். அதை மறைக்க இந்துத்துவா என்ற பெயரில் வெகுமக்களை திரட்டுகின்றனர். இந்துத்துவாவை எதிர்த்தால், இந்து மதத்தை எதிர்ப்பதாக மாற்று கின்றனர். இந்துத்துவா என்பதற் குள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்களை கொண்டு வந்து மாயத் தோற்றத்தை உருவாக்குகின் றனர். காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைவது தேசத்தின் பாதுகாப் பிற்கு ஆபத்தானது. காங்கிரஸ் பலவீனமடைய இந்த கட்சியில் இருந்த தலைவர்கள்தான் காரணம். மாநில அளவில் கட்சியை உடைத்து புதுக் கட்சிகளை தொடங்கினர். அந்த கட்சிகளை காங்கிரஸ் கட்சி யோடு ஒருங்கிணைக்க வேண்டும். தற்போதைய நாட்டின் சூழலில் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து பணியாற்ற தேசிய அளவில் இடது சாரிகள் உடன்பட்டு நிற்கிறார்கள். தாழ்த்தப்பட்ட பழங்குடி, சிறு பான் மையினர் வாக்குகளால் தான் காங்கிரஸ் உயிர்ப்போடு இருக் கிறது. சிறுபான்மையினர் ஓட் டுக்களே தேவையில்லை என்று அறிவித்து பாஜக செயல் படுகிறது. தாழ்த்தப்பட்ட பழங் குடிகளையும் ஒருங்கிணைக்க பணியாற்றுகிறது. இதை காங்கிரஸ் உணர்ந்து, அனைத்து ஜனநாயக சக்திகளையும் அணி திரட்ட வேண்டும்.

 

No comments:

Post a Comment