சென்னை, ஜூலை 19 காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் மெரினா குதிரை சவாரி ஓட்டி களுக்கு சீருடை-அடையாள அட்டைகளை மயிலாப்பூர் உதவி ஆணையர் வழங்கினார்.
சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி பிரபலம். சவாரி தொழிலில் 20 குதிரைகள் இருக்கின்றன. பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரும் இடம் என்பதால் குதிரை சவாரி ஓட்டிகளுக்கு சீருடை வழங்கும் யோசனை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் மனதில் உதித்துள்ளது. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் மயிலாப்பூர் உதவி ஆணையர் சீனிவாசன் குதிரை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஊழியர்களுக்கு சீருடை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
பின்னர் அவர்களது ஒளிப்படம், தனிப்பட்ட விவரங்கள் மெரினா காவல் நிலையத்தில் பெறப்பட்டது. அதனடிப் படையில் அவர்களுக்கு ஒளிப்படத்துடன் கூடிய அடையாள அட்டை தயார் செய்யப்பட்டது. இந்த நிலையில் குதிரை சவாரி ஓட்டுகளுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டையை உதவி ஆணையர் சீனிவாசன் 17.7.2022 அன்று வழங்கினார்.
அப்போது அவர், "மெரினாவுக்கு வரும் சுற்றுலா பயணி களிடம் கனிவாக நடந்துக் கொள்ள வேண்டும். சட்டவிரோத செயல்கள் அரங்கேறுவதை அறிந்தால் அது குறித்து காவல் துறையினர் கவனத்துக்கு உடனடியாக கொண்டு வர வேண்டும்" என்று அறிவுரை வழங்கினார்.

No comments:
Post a Comment