கீழடி அகழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 3, 2022

கீழடி அகழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு

திருப்புவனம், ஜூலை 3  கீழடி அக ழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது. 

நேற்று (2.7.2022) அதே குழியை ஆழப்படுத்தியபோது சுடுமண் செங்கல்களால் கட்டப்பட்ட செங்கல் கட்டுமானம் கண்டறியப் பட்டது. 4 அடி நீளமுள்ள இந்தக் கட்டுமானத்தில் மூன்றடுக்கு வரிசை யில் செங்கல் கட்டப் பட்டுள்ளது. 

அதனருகே 2 சுடுமண் பானைகள் சிதைந்த நிலையில் உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த செங்கல் கட்டு மானத்தில் உள்ள செங்கல்கள் சிதையாமல் ஒழுங்கான வடிவத்தில் உள்ளது. மேலும், ஆய்வு செய்தால் கட்டுமானத்தின் நீளம், உயரத்தை கண்டறியலாம் என தொல்லியல் ஆய் வாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment