பா.ஜ.க.வுக்கு அடகுபோனதுதான் அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 5, 2022

பா.ஜ.க.வுக்கு அடகுபோனதுதான் அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம்!

குருவரெட்டியூரில் செய்தியாளர்களிடையே  தமிழர் தலைவர்

குருவரெட்டியூர், ஜூலை5 பா.ஜ.க.விடம் அடகு போனது தான் அ.தி.மு.க.வின் குழப்பத்துக்கு முக்கிய காரணம் என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். . 

நேற்று (4.7.2022) குருவரெட்டியூருக்குச் சென்ற   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

சேரக்கூடாத இடத்தில் சேர்ந்ததினுடைய விளைவுதான்!

செய்தியாளர்: அ.தி.மு.க.வில் ஏற்படும் உட்கட்சிப் பிரச்சினைகளுக்கு பின்னணியில் பா.ஜ.க.தான் இருக் கிறதா?

தமிழர் தலைவர்: அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை யில்,  பா.ஜ.க. ஆட்டுகின்ற பொம்மலாட்டத்தில் சிக்கி யுள்ளதால் இந்தப் பரிதாப நிலை ஏற்பட்டு இருக்கிறது.

பொன்விழாவை அவர்கள் கொண்டாடி மகிழ வேண்டிய காலகட்டத்தில், புண் விழாவாக அதை ஆக்கிக்கொண்டு, பல குழுக்களாக, ''பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்'' என்று சொல்லக்கூடிய அளவில், அ.தி.மு.க.வை ஆக்கிக் கொண்டிருப்பதற்குக் காரணமே, பா.ஜ.க.வோடு அவர்கள் பொருந்தாத கூட்டு வைத்ததினுடைய விளைவுதான். சேரக்கூடாத இடத்தில் சேர்ந்ததினுடைய விளைவுதான், மிகப்பெரிய ஆபத்தை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

அ.தி.மு.க. லேடி வழியிலே போகவில்லை - 

மோடி வழியிலே போகிறது

எனவே, அ.தி.மு.க. எப்பொழுது பா.ஜ.க. கூட்டணி யிலிருந்து வெளியேறுகிறார்களோ, அடமானப் பொருளாக இல்லாமல், தங்களை சுதந்திரமானவர்களாக ஆக்கிக் கொண்டால்தான், அவர்கள் உண்மையான தலைமைக் கொண்டவர்களாக ஆவார்களே தவிர, மற்றபடி ஒற்றைத் தலைமையா? இரட்டைத் தலை மையா? மூன்று தலைமையா? என்று ஆய்வு செய்வதைவிட, முதலில் தாங்கள் சரியாக இருக்கி றோமா? சுதந்திரமாக இருக்கிறோமா? அல்லது நிபந்தனை உள்ள அடிமைகளாக ஆக்கப்பட்டு இருக்கிறோமா - இல்லையானால், உங்கள் கட்சியை உடைப்போம் - உங்கள் சின்னத்தைப் பறிப்போம் என்று சொல்பவர்கள் யார் என்று புரிந்துகொண்டால்,  பழைய காலத்தை நினைத்துப் பார்த்தால், நிச்சயமாக இது லேடி வழியிலே போகவில்லை - மோடி வழியிலே போகிறது என்கிற ஆபத்தைப் புரிந்துகொள்ளலாம்.

நாட்டின் பாதுகாப்பிற்கே 

அது பலகீனமாகும்

செய்தியாளர்: அக்னிபத் திட்டம் உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறதே, அதுபற்றி?

தமிழர் தலைவர்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும்கூட, அக்னிபத் திட்டத்தை எதிர்த்து இளை ஞர்கள் இந்த அளவிற்கு ஆவேசமாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை - அந்த மூலகாரணத்தை அவர்கள் பார்க்கவேண்டும்.

14 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்று அவர்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொண்டிருந்த நிலையை மாற்றி, 4 ஆண்டுகள் அவர்கள் பணியாற்றவேண்டும் என்று - ஒப்பந்த முறையில் ஆக்கினால், அது ராணுவத்தையே கொச்சைப்படுத்துவதாகும் - நாட்டின் பாதுகாப்பிற்கே அது பலகீனமாகும்.

நான்கு ஆண்டுகள் பணி முடித்தவர்களில், ஒரு பகுதியினரை மட்டும் நாங்கள் தேர்வு செய்து, நியமனம் செய்வோம்; மீதம் உள்ளவர்கள் அவரவர்களுடைய அப்பன் தொழிலை செய்யவேண்டும் - மீண்டும் குலக்கல்வித் திட்டத்திற்குப் போகவேண்டும் என்று சொன்னால், அந்த இளைஞர்களின் எதிர்காலம் என்னாகும்?

ஒருவேளை அந்த இளைஞர்கள் தீவிரவாதிகள் ஆனால், நாட்டின் நிலை என்னாகும்? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அவர்களால் மக்களைச் சந்தித்து 

ஆட்சிக்கு வர முடியாது

செய்தியாளர்: பா.ஜ.க. இதுவரை 10 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து இருக்கிறார்கள்; இதேபோன்று தொடர்ந்து அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: ஏனென்றால், அவர்களால் மக்க ளைச் சந்தித்து ஆட்சிக்கு வர முடியாது என்று தெரியும்.

எனவே, யார் மக்களின் ஆதரவு பெற்று ஆட்சிக்கு வருகிறார்களோ, அவர்களை விலைக்கு வாங்க நன்றாகப் பழகியிருக்கிறார்கள். அவர்களிடம் பணம் ஏராளம் இருக்கிறது- சக்தி இருக்கிறது; ஆகவேதான், விலைக்குத் தேடுகிறார்கள்.

எனவே, அரசியல் சந்தையில் அவர்கள், விலை போகக்கூடியவர்கள் யார்? யார்? என்று தேடிக் கொண் டிருக்கிறார்களே தவிர, மக்களை அவர்கள் நம்ப வில்லை; அவர்கள் கார்ப்பரேட்டுகளை நம்புகிறார்கள்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.


No comments:

Post a Comment