அமைச்சர் மற்றும் பல்வேறு தோழர்கள் விடுதலை சந்தா, நன்கொடை வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 29, 2022

அமைச்சர் மற்றும் பல்வேறு தோழர்கள் விடுதலை சந்தா, நன்கொடை வழங்கினர்


தமிழர் தலைவரின் 60 ஆண்டுகால 'விடுதலை' ஆசிரியர் பணிக்கு  நன்றி காட்டும் நிகழ்வாக நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களிடம்  நூறு ஆண்டு சந்தா ரூபாய் இரண்டு  லட்சமும்  திமுக மாவட்ட செயலாளர் வைரமணி அவர்களிடம்  10 ஆண்டு சந்தா ரூபாய் 20 ஆயிரமும்  மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் மு சேகர் பெற்றுக் கொண்டார். உடன்:  முபாரக் அலி. 

சிதம்பரம் - கீரப்பாளையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களிடம் மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன்  விடுதலை சந்தா பெற்றுக் கொண்டார்.  

வடசென்னை மாவட்டத்தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் முதல் தவணையாக விடுதலை சந்தா ரூ.38,000 /- வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர் கி.இராமலிங்கம், மாவட்டச் செயலாளர் தி.செ.கணேசன், மாவட்ட அமைப்பாளர் சு. அன்புச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர். (28.07.2022 , பெரியார் திடல்).

ஜூலை 30இல் அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு நன்கொடையாக ஆண்டிமடம் ஒன்றிய கழகம் சார்பில்  ரூ 1,00,000 அரியலூர் மாவட்ட கழக செயலாளர் க.சிந்தனைச் செல்வன், மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம்  தலைமையில்  கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார் ஆகியோரிடம் வழங்கினார் உடன் மண்டலத் தலைவர் கோவிந்தராசன், மண்டல செயலாளர் மணிவண்ணன், மாவட்ட அமைப்பாளர் இரத்தின. இராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சங்கர், மாவட்ட தொழிலாளரணி தலைவர் சிவக்கொழுந்து, மாவட்ட இளைஞரணி தலைவர் சு.அறிவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் திராவிட விஷ்ணு, மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் வெ.தமிழரசன், ஓவியர் புகழேந்தி.

தென்சென்னை மாவட்ட தலைவர்  இரா. வில்வநாதன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்  44  ஆண்டு விடுதலை சந்தாவுக்கான  தொகை ரூ.79,200அய் வழங்கினார். உடன்  தென்சென்னை மாவட்ட செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி. (பெரியார் திடல் - 26.07.2022).

மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 7  ஆண்டு, 9 அரையாண்டு விடுதலை  சந்தாவுக்கான  தொகை ரூ.23,000 வழங்கினார்.உடன் மாநில அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம்.(பெரியார் திடல்-26.07.2022).

அம்பத்தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 11  ஆண்டு, 4 அரையாண்டு விடுதலை  சந்தாக்களுக்கான  தொகை ரூ.23,400அய் வழங்கினார்.உடன்: ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல். (பெரியார் திடல்-27.07.2022).

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் கரிகாலன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 2 ஆயுள் சந்தா,  11 ஆண்டு விடுதலை சந்தா என மொத்த தொகை ரூ.60,000 (ரூபாய் அறுபதாயிரம் மட்டும்) வழங்கினார். (பெரியார் திடல்-27.07.2022).


No comments:

Post a Comment