வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் அனைத்து தரப்பினரையும் அணுகி சந்தா சேர்க்க கழகத் துணைத் தலைவர் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் அனைத்து தரப்பினரையும் அணுகி சந்தா சேர்க்க கழகத் துணைத் தலைவர் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 12- வடசென்னை மாவட்ட திராவிடர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம், 9.7.2022 அன்று மாலை 5.30 மணிக்கு, திருவொற்றியூர்-எஸ்.பி.கோவில் தெருலுவிலுள்ள தி.வே.சு. திரு வள்ளுவர் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தொடக்கத்தில் கி.இராமலிங் கம் கடவுள் மறுப்பு கூறினார்.

கூட்டத்தில் கழக  துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், சென்னை மண்டல செய லாளர் தே.செ.கோபால், மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், செயலா ளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், அமைப் பாளர் புரசை சு.அன்புச்செல்வன், மாவட்ட இளைஞரணித் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் சத்தீஷ், பெரியார் அமைப்பு சாரா தொழிலாளர் அணி வடசென்னை மாவட்ட தலைவர்  ஆ.துரை ராவணன், திரு வொற்றியூர் தலைவர் பெரு.இளங்கோ, செயலாளர் ந.இரா சேந்திரன், திருவொற்றியூர் பெ.செல்வராசு, தே.ஒளிவண்ணன், எண்ணூர் தலைவர் மணி. காளி யப்பன், செயலாளர் பொ.இராமச் சந்திரன் ஆகியோர் உரையாற்றி னர்.

முனைப்புடன் பணி ஆற்றுக!

இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தமிழர் தலைவர் ஆசிரியர் ‘விடு தலை'க்கு ஆசிரியராகப் பொறுப் பேற்று 60 ஆண்டுகள் ஆகும் நிலையில் பல வகை இடர்ப்பாடுகள் - வருவாய் இழப்புகள், மிசா கால தடைகள், கரோனா கால கட்டம் இவைகளைக் கடந்து சிறப்பாக வெளிவருவதைக் குறிப்பிட்டார். ‘விடுதலை'யால் பயன் பெறாத தமிழர் எவரும் இருக்க முடியாது எனவே அனைத்துத் தரப்பின ரையும் அணுகி சந்தா சேர்ப்பதில் தோழர்கள் முனைப்புடன் பணி யாற்றிடக் கேட்டுக் கொண்டார்.

கழகத் துணைத் தலைவரிட மிருந்து - சென்னை மண்டல செய லாளர் தே.செ.கோபால், இரண் டாம் கட்டமாக 20 சந்தா இரசீதை யும், வடசென்னை மாவட்ட இளை ஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மேனாள் மாவட்ட செயலாளர் தே.ஒளிவண் ணன், ஆகியோர் தலா 20 சந்தா இரசீதினையும், புதுவண்ணை செல்வம் 10 இரசீதினையும் பெற் றுக் கொண்டனர்.

மேனாள் மாவட்ட தலைவர் தி.வே.சு.திருவள்ளுவர், திருவொற் றியூர் நகர கழக செயலாளர் ந.இராசேந்திரன் ஆகியோர் கழகத் துணைத் தலைவர் கவிஞருக்குப் பயனாடை அவித்தனர். வாசுகி திருவள்ளுவன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனிக்கு பய னாடை அணிவித்தார்.

கூட்டத்தில் க.கலைமணி, மு.ஜான்சன், இந்திரா, சுந்தர், பொ.லாரன்சு, அமைந்தகரை அருள் தாசு, சு.அரவிந்த குமார், மற்றும் தோழர்கள் பலரும் கலந்து கொண் டனர். 

நிறைவாக திராவிடர் மகளிர் பாசறை தோழர் க.சுமதி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment