ஒன்றிய அரசால் நமது உரிமைகள் பறிக்கப்படுகின்றன நம்முடைய களப்பணியை முழுவேகத்தோடு செய்வோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

ஒன்றிய அரசால் நமது உரிமைகள் பறிக்கப்படுகின்றன நம்முடைய களப்பணியை முழுவேகத்தோடு செய்வோம்

குருவரெட்டியூரில் நடைபெற்ற மாநில உரிமை மீட்பு விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

குருவரெட்டியூர், ஜூலை 6 சுயமரியாதைச் சுடரொளி குருவரெட்டியூர் ‌நினைவில் வாழும் ப.பிரகலாதன் நினைவு அரங்கம் பெரியார் திடலில் 4.7.2022 அன்று மாலை 6.45மணிக்கு மாநில உரிமை மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. அனைவரையும் நகர  செயலாளர் ந.கிருட்டிண மூர்த்தி வரவேற்றுப்பேசினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூர் ப.செல்வராஜ்,ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.வி.சரவணன், நாடாளு மன்ற மேனாள் உறுப்பினர்கள் ‌வி.பி.சண்முகசுந்தரம், என்.ஆர். கோவிந்த ராஜர், அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர், திமுக ஏ.ஜி.வெங்கடாசலம், குருவை நாத்திகஜோதி ஆகியோர் சுயமரி யாதைச் சுடரொளி குருவரெட்டியூர் ‌நினைவில் வாழும் ப.பிரகலாதன் அவர்களின் ஊர்ப்பணி, இயக்கப்பணி பற்றி பேசினார்கள்.

இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.தமது உரையில் "சுயமரியாதைச் சுடரொளி ப.பிரகலாதன் அவர்களின் இயக்கப்பணிகள் பற்றியும், குருவரெட்டியூருக்கு முதன்முறையாக வந்தபோது எதிர்ப்பும் அடுத்தடுத்து வந்த போது ஊர்மக்களே வரவேற்றதையும் எடுத்துச்சொல்லி இன்று ஒன்றிய அரசால் நமது உரிமைகள் பறிக்கப்படுகின்றன அதனை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் இந்தவேளையில் ஒரு களப்பணிப் போராளியான தோழர் பிரகலாதன் இறப்பு நமக்கு வேதனை என்றாலும் நம்முடைய களப்பணியை முழுவேகத்தோடு செய்வோம்."என்றார்.

கூட்டத்திற்கு அம்மாபேட்டை ஒன்றிய திமுக செயலாளர் சரவணன்,வட்டார காங்கிரஸ் தலைவர் வி‌ஜயகுமார், மாவட்ட திமுக துணை செயலாளர் எம்.பி.அறிவானந்தம், ஒன்றிய பெருந்தலைவர் விஜயநிர்மலாதேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அசோக்குமார், சின்ராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் பழனி.புள்ளை யண்ணன், கோ.பாலகிருட்டிணன், இரா.நற்குணன், கா.யோகானந்தம், கோபி சீனிவாசன்,  மண்டல செயலாளர் பெ.ராஜமாணிக்கம்,  ஈரோடு மாவட்ட  தலைவர் கு.சிற்றரசு,கோபி மாவட்ட தலைவர் ந.சிவலிங்கம், செயலாளர் மு.சென்னியப்பன், திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் யாழ் ஆறுச்சாமி,  வழக்குரைஞரணி மாநில இணை செயலாளர் திருப்பூர் பாண்டியன்,ஈரோடு மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், தொழிற்சங்க செயலாளர் கே.காமராஜ், பேராசிரியர் ப.காளிமுத்து, ஒன்றிய தி.கசெயலாளர் க.மணிகண்டன், ஆசிரியர் அணி பாலசுப்பிரமணியம், ப.அர்ச்சுணன், சு.லோகநாதன், இளைஞர் அணி மாணவரணி பொறுப்பாளர்கள் அ.ஜீவரசன், வி.கார்த்தி, நவ்ராஜ், மணிகண்டன், சஞ்சய்குமார், த.மோகன், வே.மதிவாணன், தேவேந்திரன், அ.பென்ஜான்சன், கவேல்முருகன்,வெ.அரிகிருட்டி ணன், இரா.சிறிதர், ரா.ஜெகதீசன்,பா.கலைவாணன்,பா.தமிழ்மணி,பா.கவுசிகன்,யாழ்நிதர்சன்,பி.மணிமாறன்,கி.கணேசன், மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி தலைவர் அச்சூரியா, செயலாளர் நா.மோகன்ராஜ், அமைப்பாளர் ச.சசிதரன்,குறிச்சிகோவிந்தன், பழனிசாமி,சு.தட்சணாமூர்த்தி,ஈரோடு ஜெபராஜ்,கோ.திருநாவுக்கரசு, து. நல்லசிவம்,பி.என்.எம்.பெரியசாமி, தமிழ்செல்வன், பவானி அ.அசோக்குமார், புஷ்பராஜ், செங்காளி பாளையம் பழனிசாமி, கதிரவன்,பாலாஜி, திருமுருகன், மகளிரணியை ச்சார்ந்த ப.ஈஸ்வரி,பல.ஜீவா,ஜெயராணி,மாதம்மாள்பிரகலாதன், துளசிமணி கிருட்டிண மூர்த்தி, மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 இறுதியாக குருவை நகர தலைவர் ப.சத்தியமூர்த்தி நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.

ஊர் முழுவதும் கழகக் கொடிகள், பதாகை கள் வைக்கப்பட்டிருந்தன..குருவரெட்டியூர் பகுதி கழகக் கோட்டையாகவே இருக்கும் என்பதை உறுதி செய்யும் எழுச்சி யை காணமுடிந்தது.

நினைவுக் கல்வெட்டு - கொடிக்கம்பம்

சுயமரியாதைச் சுடரொளி குருவரெட்டியூர் ப.பிரகலாதன் நினைவுக் கொடிக்கம்பம், நினைவுக் கல்வெட்டுத் திறப்பு, மாநில உரிமை மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. குருவரெட்டியூர் ஊரே திரண்டு வந்து  தமிழர் தலைவர் உரையைக் கேட்டனர்.... ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூரில் 04.07.2022 திங்கள் மாலை 6மணியளவில் தந்தை பெரியார் சிலை அருகே அமைந்துள்ள சுயமரியாதைச்சுடரொளி ப.பிரகலாதன் (45ஆண்டு அவரது இயக்க ப்பணிகள்) நினைவுக் கொடிக்கம்பம்,நினைவுக் கல்வெட்டை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்து  தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். உடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவரும் மேனாள் ஒன்றிய அமைச்சருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன், தி.மு.க துணைப்பொதுசெயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மேனாள் எம்.பி. கோபி.வி.பி.சண்முகசுந்தரம், மேனாள் எம்.பி.என்.ஆர்.கோவிந்தராஜர் மற்றும் திமுக, திராவிடர் கழக, காங்கிரஸ் உட்பட அனைத்துத் தோழமைக்கட்சியினர் ஊர் மக்கள் என ஆயிரக்கணக்கில் திரண்டு தந்தை பெரியார் வாழ்க என்று முழக்கமிட்டனர்.

அதனைத்தொடர்ந்து சுயமரியாதை ச்சுடரொளி குருவரெட்டியூர் ‌நினைவில் வாழும்மண்டல தலைவர் ப.பிரகலாதன் இல்லம் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


No comments:

Post a Comment