பெண்களுக்கான சிறப்பு வசதியை அறிமுகம் செய்த "வாட்ஸ்அப்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

பெண்களுக்கான சிறப்பு வசதியை அறிமுகம் செய்த "வாட்ஸ்அப்"

பெண்களுக்கு உதவும் வகையில் மாதவிடாய் கண்காணிப்பு வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக 'சிரோனா ஹைஜீன்' என்ற பெண்கள் சுகாதார நிறுவனத்துடன் வாட்ஸ்அப் கைகோர்த்துள்ளது. இந்த வசதியின்படி பெண்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இனி தங்கள் மாதவிடாய் களை கண்காணிக்க ஒரு ஆண்டிராய்டு ஆப் தனியாக தேவையில்லை. இதற்காக 9718866644 என்ற எண்ணில் உள்ள சிரோனா நிறுவனத்தின் வாட்ஸ்அப் வணிகக் கணக்கிற்கு முதல் 'ஹாய்' என மெசேஜ் அனுப்பவேண்டும். பின்னர், பயனர்கள் தங்கள் விவரங்களை வாட்ஸ்அப்பில் தெரிவிக்கவேண்டும். மேலும் சிரோனா நிறுவனம் கேட்கும் சில கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.


No comments:

Post a Comment