மழைநீர் வடிகால் பணிகள் வரும் செப்டம்பருக்குள் முடியும்-அமைச்சர் கே.என்.நேரு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

மழைநீர் வடிகால் பணிகள் வரும் செப்டம்பருக்குள் முடியும்-அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை, ஜூலை 9  சென்னையில் முதன்முறையாக ஒரே நேரத்தில் 1000 கி.மீ நீளத்திற்கு மேல் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடப்பது இதுவே முதல் முறையாகும். இப்பணிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் இறுதிக்குள் முடிக் கப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். 

சென்னை மாநகராட்சி அடை யாறு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள், சென்னை நதிகள் சீரமைப்பு அறக் கட்டளை சார்பில் அடையாறு ஆற்றங்கரையில் மேற் கொள்ளப்பட்டு வரும் மரக்கன்று கள் நடும் பணி, சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள், கட்டண மில்லா கழிப்பிடம் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் போன்ற பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று (8.7.2022) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி  மேயர்  பிரியா, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா,  துணை மேயர் மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா,  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கலந்து கொண்டனர்.

பின்னர், அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை உள்பட தமிழ் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை முதலமைச்சர்  நேரில் சென்று ஆய்வு செய்து வரு கிறார். 

சென்னையில் பல்வேறு வகையிலான நிதிகள் மூலம் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

அதன்படி,ரூ608 கோடி  மதிப்பில் 179 கி.மீ நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. 

இதேபோல் கோவளம், கொசஸ் தலை ஆற்று பகுதிகளை இணைக்கும் வகையில், கால்வாய் அமைக்கும் பணி 1173.88 கி.மீ நீளத்திற்குரூ5,054 கோடி மதிப்பில் நடக்கிறது. ஏற் கெனவே உள்ள மழைநீர் கால்வாயை மேம்படுத்தி, தூர்வாரும் பணிரூ90 கோடி மதிப்பில் 1085 கி.மீ நீளத்திற்கு நடந்து வருகிறது. 

சென்னையில் 1000 கி.மீ நீளத்திற்கு மேல் ஒரே நேரத்தில் மழைநீர் வடிகால் அமைக் கும் பணி நடப்பது இதுவே முதன் முறையாகும். மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக் குள் முடிக்கப்படும். 

நகராட்சி துறையில் ஊழல் குற்றச்சாட்டு உள்ள அதிகாரிகளை விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.  ஊழலுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட்சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கையை ஒருநபர் ஆணையர் வழங்கிய பின்னர் அதன் அடிப் படையில் நடவடிக்கை எடுக்கப் படும். 

இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment