ரேஷன்கடை ஊழியர்களுக்கு முழு உடற்பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

ரேஷன்கடை ஊழியர்களுக்கு முழு உடற்பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை, ஜூலை 9 ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செய லாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு அரசின் முன் னோடி திட்டமான பொது விநியோக திட்ட பணிகளை எவ்வித குறை களுக்கும் இட மின்றி சிறப்பாக செயல்படுத்தி பொதுமக்களுக்கு சீரிய முறையில் சேவை புரிந்து வரும் பொது விநியோக திட்டப் பணி யாளர்களுக்கு அவர்களின் உடல் நலத்தினை பாதுகாக்கும் விதமாக ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய் யப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டு தலின் படி, தமிழக மக்கள் அனைவருக்கும் பொது விநி யோக திட்டத்தின் வாயிலாக அத்தியா வசிய உணவு பண் டங்களை விநியோகம் செய்து வரும் நியாய விலைக் கடையின் முன்களப் பணி யாளர்களுக்கு முழு உடற் பரிசோதனை செய் யப்பட்டு வருகிறது. 

முதற்கட்டமாக, சென்னை (தெற்கு) மண்டலத்திலுள்ள திருவல்லிக்கேணி நகர கூட் டுறவு சங்கம் நடத்தும் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு கடந்த மாதம் 29ஆம் தேதி தேனாம் பேட்டை காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடி வளாகத்தில் 468 பணியா ளர்களுக்கு மருத்துவ பரிசோத னைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து நேற்று, சென்னை (வடக்கு) மண் டலத்திலுள்ள பூங்கா நகர் கூட்டுறவு மொத்த  விற்பனை பண்டகசாலை, வடசென்னை கூட் டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, சைதாப் பேட்டை தாலுகா கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியா ளர்கள் விற்பனை சங்கம் மற்றும் பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள் நடத்தும் 583 நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் 727  பணியாளர்களுக்கு மாத வரத்தில் உள்ள விவசாய கூட் டுறவு பணியா ளர்கள் பயிற்சி நிலையத்தில் அப்போலோ மருத்துவ குழுவுடன் இணைந்து முழு உடற்பரிசோதனை முகாம் நடந்தது. 

இந்த முகாமை கூட்டுறவுத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தொடங்கி வைத்து முன்கள பணியாளர்களுக்கு முழு உடற்பரிசோதனை செய் யப்பட்டதை நேரில் பார்வையிட்டார்.  இதில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண் முக சுந்தரம், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) சங்கர் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment