புதுச்சேரி, ஜூலை 9 கோரிமேட்டில் உள்ள பூச்சி கட்டுப்பாட்டுத்துறையினர் டெங்கு, சிக்கன்குனியாவை பரப்பும் கொசுக்களை ஒழிப்பது குறித்து கடந்த 4 ஆண் டாக தீவிர ஆராய்ச்சி செய்து வந்தனர். இந்த நிலையில் டெங்கு, சிக்கன் குனியாவை கட்டுப்படுத்தும் சிறப்பு பெண் கொசுக்களை இந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது.
புதுச்சேரி: குளிர்காலம், மழைக்காலம் தொடங்கி விட்டாலே டெங்கு, சிக்கன்குனியா நோய்கள் பரவ தொடங்கிவிடும். இந்த கொசுக்களால் பலவித நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கொசுக்களை ஒழிக்க பல்வேறு ஆராய்ச்சிகளும் நடந்து வருகிறது. புதுவை கோரிமேட்டில் உள்ள பூச்சி கட்டுப்பாட்டுத்துறையினர் டெங்கு, சிக்கன்குனியாவை பரப்பும் கொசுக்களை ஒழிப்பது குறித்து கடந்த 4 ஆண்டாக தீவிர ஆராய்ச்சி செய்து வந்தனர். இந்த நிலையில் டெங்கு, சிக்கன் குனியாவை கட்டுப்படுத்தும் சிறப்பு பெண் கொசுக்களை இந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்த பெண் கொசுக்கள் ஆண் கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்யும் போது வைரஸ்களை சுமக்காத லார்வாக்களை உருவாக்குகின்றன. இதனால் கொசு மூலம் வைரஸ் பரவுவது தடுக்கப்படும். இந்த கொசுக்களை ஒவ்வொரு பகுதியாக விடுவித்து பரவ விட ஒன்றிய, மாநில அரசுகளின் ஒப்புதல் பெற வேண்டும்.
No comments:
Post a Comment