மண்டல அளவிலான தடகளப் போட்டிகளில் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தொடர்ச்சியாக முதலிடம் பெற்றுள்ளார் சம்யுக்தா. 2012ஆம் ஆண்டு கோவை யில், குடியரசு தின விழாவை முன்னிட்டு நடந்த விளையாட்டுப் போட்டியில் 14-வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவுகளில், நீளம் தாண்டுதலில் அவரின் 5.29மீ சாதனையை இன்றுவரை யாரும் முறியடிக்க வில்லை.
"நம்மால் முடியாது என்று நினைத்து முடங்கிக் கிடக் காமல், தடைகளை உடைத்து சாதிக்கும் மனப்பான்மையை பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று தன்னம்பிக்கையோடு பேசுகிறார் சம்யுக்தா.
சிவகாசியில் பிறந்த இவர், தடகளத்தில் பல சாதனைகள் படைத்து வருகிறார். அவரது அப்பா சிவக்குமார் தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிகிறார். அம்மா சீத்தா குடும்பத்தை நிர்வகித்து வருகிறார். அவரது குடும்பம் கோவையில் குடியேறிய தால் ஆரம்பக் கல்வியை அங்கு படித்தார். பின்னர் மதுரையில் உயர்நிலை கல்வி முடித்தார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. சைக்காலஜி படித்தார். தற்போது எம்.எஸ்சி. சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
3ஆம் வகுப்பு படிக்கும் போது மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அவருடன் 20 வயதுக்கும் மேற் பட்டவர்கள் பங்கேற்றனர். அப்போட்டியில் அவர் முதல் 10 இடங்களுக்குள் வந்தார். அதன் பிறகு 5ஆம் வகுப்பில் இருந்து 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
சென்னையில் 2009ஆம் ஆண்டு பன் னாட்டு அளவில் நடந்த மாரத்தான் போட்டி யில் பங்கேற்று 12ஆவது இடத்தைப் பிடித்தார். அதில் அவர் மட்டுமே குறைந்த வயதுடைய மாணவி. அந்தப் போட்டி தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பானது. அதுவே அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.
சாதனைகள்
மண்டல அளவிலான தடகளப் போட்டி களில் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தொடர்ச்சியாக முதலிடம் பெற்றார்.
2012ஆம் ஆண்டு கோவையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு நடந்த விளை யாட்டுப் போட்டியில் 14-வயதுக்கு உட்பட் டோருக்கான பிரிவுகளில், நீளம் தாண்டுதலில் அவர் படைத்த 5.29 மீ சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்க வில்லை. கல்லூரி களுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் நடுவராக இருந் திருக்கிறார்..
தடகளப் போட்டிகளில் மாவட்ட அளவில் 210 முறை, மாநில அளவில் 45 முறை, தேசிய அளவில் 8 முறை வென்றுள்ளார். தற்போது அவரிடம் 50 கோப்பைகளும், 300 பதக்கங்க ளும் உள்ளன. விளையாட்டைப் போலவே கல்வி யிலும் அவர் முதல் மாணவியாக இருக்கிறார்.
அதன் காரணமாக, பள்ளி முதல் கல்லூரி வரை சிறப்பு சலுகை மூலம் இலவசமாகவே படித்து வருகிறார்.
விளையாட்டில் ஆர்வம் செலுத்தி னாலும், மருத்துவர் ஆக வேண்டும் என்பதே அவருடைய கனவாக இருந்து வந்தது. ஆனால் அதற்கான தேர்வுகளில் பங்கேற்க முடியவில்லை. பின்பு தனியார் கல்லூரியில் சைக்காலஜி (மனோவியல்) பிரிவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
"இதுவும் மருத்துவத்துக்கு இணையான துறை என்பதால் உற்சாகமாக படித்துக் கொண்டி ருக்கிறேன். சமூகத்தில் தற்போது அனைவருக்கும் தேவையாக இருப்பது ஆற்றுப் படுத்துதல் (கவுன் சிலிங்) தான். இதன் மூலம் பலரது வாழ்வை மீட்டுக்கொடுக்க முடியும். கல்வியோடு, விளையாட்டிலும் ஆர்வத்துடன் பங்கேற்று சாதனை படைத்து வருகிறேன்" என்கிறார்.
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு, தடகளத்தில் இந்தியா விற்கு தங்கம் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதே அவரது கனவாகும். "நான் சிறுவயதில் சரியாக சாப்பிட மாட்டேன். அதனால் ஏற்பட்ட ஊட்டச்சத்து குறைவு காரணமாக எனக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படும். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடும் போது விரைவாக சோர்ந்து விடுவேன்.
அந்த நேரத்தில் என் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்தனர். என்னை எல்லாவற்றிலும் உற்சாகப்படுத்தி வழி நடத்தினர்.
என் அம்மா தான் என்னை முதன் முதலாக விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்றார். போட்டிக்காக எங்கு சென்றாலும் எனக்கு பக்கபலமாக இருப்பார். நான் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போதும் 'உன்னால் முடியும்' என்று துணிவும், நம்பிக்கையையும் கொடுப்பார். என் பெற்றோர் என் மீது வைத்த நம்பிக்கை யால்தான் நான் சுதந்திரமாக செயல்பட முடிகிறது" என்கிறார்.