கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி பாராட்டு
1. வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி இந்திய தொழில்நுட்ப கல்விக் கழக சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி (Best ISTE Chapter Award - 2021) விருது பெற்றது. இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் சிறப்பான செயல்பாடுகளான தொழில்நுட்ப நிகழ்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் நடத்துவதன் மூலம் மாணவ, மாணவியரின் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உறுதிசெய்யும் இக்கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகள பாராட்டும் விதமாக, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய தொழில்நுட்ப கல்வி கழக சிறந்த கல்லூரி விருது 2021 வழங்கப்பட்டது.
இச்சிறப்புமிகு விருது பெற்ற பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வரை கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பாராட்டினார்கள்.
2. பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இயங்கும் நாட்டு நலப்பணித்திட்ட அலகுகள் வாயிலாக நடைபெறும் சிறப்பான சமுதாய சேவையை பேராசிரியர் ப.முத்துக்குமாரபதிக்கு சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விருது (Best NSS Programme Officer Award-2019-20) வழங்கப்பட்டது.
நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பான செயல்பாடுகளுக்கு மூன்றாமாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர் கோ.மகேஸ்குமார் மற்றும் மூன்றாமாண்டு இயந்திரவியல் துறை மாணவர் ச.பிரவீன் ஆகியோர் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட தொண்டர் விருதினை மாணவர்கள் சார்பாக இப்பாலிடெக்னிக் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விருதினை பெற்றார். நாட்டு நலப்பணித்திட்ட விருதுகள் பெற்ற பேராசிரியர் மற்றும் மாணவர்கள இக்கல்லூரி நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பாராட்டினார்கள்.
3. இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (தமிழ்நாடு பகுதி) பாலிடெக்னிக் அளவில் நடத்திய சீனிவாச ராமானுஜம் கணிதவியல் போட்டிக்கு சிறந்த முறையில் கேள்வித்தாள் தயாரித்து அளித்த முயற்சியை பாராட்டி பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி கணிதவியல் பேராசிரியை சாந்திக்கு இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இக்கல்லூரியின் இரண்டாமாண்டு மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் மாணவர் எஸ்.தமிழழகன், இரண்டாமாண்டு கட்டடவியல் மாணவர் எஸ்.அமுதநிலவன் ஆகியோர் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழக சிறந்த மாணவர் விருது 2021 பெற்றனர். விருதுகள் பெற்றவர்களை கல்லூரி நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பாராட்டினார். இந்நிகழ்வில் இப்பாலிடெக்னிக் முதல்வர், துணைமுதல்வர் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கழக செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment