கற்றல் கற்பித்தல் தொழில்முறை மேம்பாட்டு மய்யம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

கற்றல் கற்பித்தல் தொழில்முறை மேம்பாட்டு மய்யம்

சென்னை, ஜூலை 6 நாட்டின் புகழ்பெற்ற கல்வி சார் புத்தக பதிப்பாளர்களான ஓரியன்ட் பிளாக்ஸ்வான் தங்களது 75ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆசிரியர்களுக்கான தொழில்முறை மேம்பாட்டு மய்யத்தை" தொடங்குவதாக அறிவித்துள்ளது

இதன் துவக்க விழாவில், ஓரியன்ட் பிளாக்ஸ்வான் ஃபசிஹா காதர் கூறுகையில், “ஆசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கு நாங்கள் பலவிதமான வாய்ப்புகளை  வழங்குகிறோம். எங்களது பாட திட்டங்கள் சுய வேகம் மற்றும் மலிவு விலையில் உள்ளன. இன்று இந்திய வகுப்பறைகளின் முகம் மாறிவரும் நிலையில், ஆசிரியர்களின் சமூகம் தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கான புதிய வாய்ப்புகளை ஆராய்கிறது.

 அய்தராபாத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தின் சிறந்த கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் டீன், கல்வியாளர் டாக்டர் சாம்சன் தாமஸ் குறிப்பிடுவது போல், பயிற்சி வகுப்பறை சூழலுக்கு ஆசிரியரை தயார்படுத்துகிறது. வளர்ச்சி என்பது மாறிவரும் கற்பித்தல்-கற்றல் சூழலுக்கு ஆசிரியர் மாற்றியமைக்கும் செயல்முறையாகும் என்று கூறினார்.


No comments:

Post a Comment