அமெரிக்கத் தமிழ் வானொலி அமைப்பாளர் ஆறுமுகம் பேச்சிமுத்து மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

அமெரிக்கத் தமிழ் வானொலி அமைப்பாளர் ஆறுமுகம் பேச்சிமுத்து மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் மேனாள் செயலரும், அமெரிக்கத் தமிழ் வானொலி அமைப்பாள ருமான ஆர்வமிகு இளைஞர் திரு. ஆறுமுகம் பேச்சிமுத்து அவர்கள்  20.7.2022 அன்று ஒரு விபத்தில் மறைவுற்றார் என்ற பேரிடியான செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அமெரிக்கத் தமிழ் வானொலிக்காக நேரடியாக நம்மிடம் பேட்டியெடுத்து ஒளி பரப்பியதோடு எப்போதும் நம்மிடம் பேரன்பு காட்டுபவர். அமெரிக்கத் தமிழர்களில் நம்பிக்கைக்குரிய ஒருவராகத் திகழ்ந்தவரான தோழர் ஆறுமுகம் பேச்சிமுத்து அவர்களின் திடீர் மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
22.7.2022
சென்னை


No comments:

Post a Comment