கிருட்டினகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 27, 2022

கிருட்டினகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி, ஜூலை 27 கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் (21.07.022) வியாழக் கிழமை அன்று காலை 11 மணி அளவில் ஊற்றங்கரை நெடுஞ்சாலைத் துறை பய ணியர் மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டம் மாவட்ட தலைவர் த.அறி வரசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டம் மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம், மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம் மண்டல செயலாளர் பழ.பிரபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஊற்றங்கரை ஒன்றிய தலைவர் க.பொன்முடி அவர்கள் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா. சரவணன் தொடக்க உரையாற் றினார்

மாவட்ட பொறுப்பாளர்களின் கருத் துரைக்குப்பின் இறுதியாக மாநில அமைப்பு செயலாளர். ஊமை. ஜெயராமன் வழிகாட் டுதல் உரையாற்றினார். கூட்டத்தில் வருகின்ற 30 ஆம் தேதி அரியலூரில் நடைபெறும் மாநில இளைஞரணி மாநாட்டிற்கு செல்வது பற்றியும் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணியை விரைந்து முடித்து தருவது பற்றியும் கலந்துரையால் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் எண் 1: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறுபதாம் ஆண்டு விடுதலை ஆசிரியர் பணியை போற்றும் வகையில்  பொதுக்குழு முடிவின்படி தரப் படுகின்ற 60 ஆயிரம் விடுதலை சந்தாவில் கிருட்டினகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட விடுதலை சந்தாக்களை உடனடியாக திரட்டி தருவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 2: வருகின்ற 30ஆம் தேதி அரியலூரில் நடைபெறும் மாநில இளைஞரணி மாநாட்டிற்கு கிருட்டினகிரி மாவட்டத்தில் இருந்து இரண்டு வாகனங் களில் செல்வது எனவும், மாநாட்டு பேரணி யில் அதிகமான இளைஞர் அணி தோழர் களை  முழு சீருடையில் பங்கேற்க செய்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது

கீழ்க்கண்ட தோழர்கள் புதிய பொறுப் பாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்:

சீனிமுத்து. ராஜேசன் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்

ப. பிரதாப் பர்கூர் ஒன்றிய தலைவர்

ரகுநாதன் பர்கூர் ஒன்றிய செயலாளர்

கா. ஞானசேகரன் பர்கூர் ஒன்றிய அமைப்பாளர்

மே.மாரப்பன் பர்கூர் நகர தலைவர்

த. சக்திவேல் காவேரிப்பட்டணம் ஒன்றிய துணைத் தலைவர் ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்படு கின்றனர்.

மேலும் 30ஆம் தேதி அரியலூர் மாநாட் டிற்கு செல்வதற்காக மாவட்ட தலைவர் த.அறிவரசன்  2000, மாநில ப.க துணை தலைவர் அண்ணா சரவணன் 2000 மாவட்ட செயலாளர் கா. மாணிக்கம் 1000, மண்டல செயலாளர் பழ. பிரபு  2000, ஒன்றிய தலைவர் பொன்முடி 1000, பர்கூர் ஒன்றிய செயலாளர் ப ரகுநாதன் 1000, காவேரிப்பட்டினம் ஒன்றிய ப.க தலைவர் வெங்கடாசலம் 500 ஆகியோர் மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெய ராமன் அவர்களிடம் நன்கொடை வழங்கினர்.

இறுதியாக ஊத்தங்கரை ஒன்றிய செய லாளர் செ. சிவராஜ் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

No comments:

Post a Comment