டான் அசோக் அழுத்தமான கேள்வி
நம்மோடு வாழ்பவர்கள் திராவிட இயலால் படித்துப் பெரிய பதவிகளுக்குச் சென்றால் நம் தமிழர்கள் நியோபிராமின் ஆகி விடுகிறார்கள்; வெளிநாடு சென்றால் நாம் தமிழர் ஆகி விடுகிறார்கள்.இந்த 90 வயதிலும் நமது தலைவர் ஆசிரியர் நாள்தோறும் அலைகிறார் - பிரச்சாரம் செய்கிறார். அளவோடு சாப்பிடுகிறார் - மதுரையில் அண்மையில் ஆசிரியரோடு அமர்ந்து சாப்பிட்ட என் தந்தையார் ஆச்சரியப்பட்டு இதை நேரில் கண்டு என்னிடம் கூறினார். பெரியார் கொள்கையும் அவருடைய வாழ்க்கை நெறிமுறையும் தான் அவரை இந்த 90 வயதிலும் பணியாற்ற வைத்திருக்கிறது.
'தினமலர்' போன்ற பார்ப்பன ஏடுகள் நாள்தோறும் நாள்தோறும் நஞ்சை கக்குகின்றன. அதனைத் தொடர்ந்து படித்தால் நம் மூளையை டாய்லட்டில் தள்ளி ஃப்ளஷ் செய்ய வேண்டியதுதான்!
மற்ற மற்ற நாடுகளில் மக்களில் இரண்டே அடுக்குதான் இந்தியாவில்தான் நான்கு அடுக்கு - அதுதான் பெரும் சிக்கல்.
வன்னியர் மாநாட்டுக்குச் சென்ற பெரியார் பேசி இருக்கிறார். தாழ்த்தப்பட்டவர்களை கீழ் ஜாதி என்று நீ ஒடுக்கினால், உனக்குமேல் - மேல் ஜாதி என்று கூறி 'பிராமணன்' ஒடுக்குவான் - இழிவுபடுத்துவான் (சூத்திரன் என்பது அதுதானே!) என்று எச்சரித்தாரே!
'தி£விட மாடல்' என்பதுஜாதி நோய்க்கான தடுப்பூசி பெரியார் அண்ணா, கலைஞர், ஆசிரியர் இவர்கள்தான் அந்த நோய்த் தடுப்பூசிகள்.
கோயிலுக்குப் போவான், பட்டைப் போட்டுக் கொள்வான்; ஆனால் பா.ஜ.க. வுக்கு மட்டும் ஓட்டுப் போட மாட்டான். இதற்குப் பெயர்தான்திராவிட மாடல்!
பிரிட்டன், அமெரிக்கா பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு முன்பே பெண்களுக்கு வாக்குரிமை சட்டம் கொண்டு வந்தது நீதிக்கட்சி (1.4.1921).
இப்பொழுது சங்கிகள், பிஜேபியினர், பார்ப்பனர், பார்ப்பன அடிவருடிகள் சொல்லுகிறார்கள். 'பார்த்தீர்களா, பார்த்தீர்களா? ஒரு பழங்குடிப் பெண்ணை குடியரசுத் தலைவராக ஆக்கியிருக்கிறோம்' என்று கித்தாப்புப் பேசுகிறார்கள்.
'நீட்'டைக் கொண்டு வந்து ஆயிரம் ஆயிரம் எஸ்.ஸி.களை டாக்டர் ஆகாமல் தடுத்துவிட்டவர்களே! ஒரு குடிஅரசுத் தலைவரைக் காட்டிலும் ஆயிரம் டாக்டர்கள் வருவதைத் தடுத்து விட்டனர். திராவிடம் நமது - ஆரியம் எதிரி என்றார் டான் அசோக்
திராவிட மாடலில் மகப்பேறு மரணம் குறைவு
டாக்டர் ராதிகா முருகேசன்
'ஹெல்த் கேர்' என்பது திராவிட மாடல் ஆட்சியில் முக்கியமாகப் பேணப்படுகிறது. இந்தியாவில் மகப்பேறு மரணம் குறைவு குழந்தை மரணம் குறைவு தமிழ்நாட்டில்தான் - 'திராவிட மாடலில்'தான்.'சமூகநீதி' என்ற தத்துவத்தில் இது முக்கியமானது 'மென்டல் ஹெல்த்' என்றால் ஏளனமாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக ஒரு டாலர் செலவு செய்தால் 75 டாலர் இலாபம் என்பது நினை விருக்கட்டும்!
ஊதிய விகிதத்தில் ஆணுக்கும் - பெண்ணுக்கும் இடையில் இடைவெளி என்பதுஏன்? இது 30 விழுக்காடு இடைவெளி உள்ளது - இந்த வேறுபாடு நீக்கப்பட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சி
தலைப்பு: "அய்க்கிய நாடுகளின் வளம் குன்றா குறிக்கோள் பார்வையில் திமுக தேர்தல் அறிக்கை"
நூல் ஆசிரியர் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து M.Sc., M.Phil, Ph.D., FRSC இணைப் பேராசிரியர் கெரியப்வாட் பல்கலைக் கழகம் எடின் பெரோ, ஸ்காட்லாந்து பிரிட்டானியா (9.1.2021).
வெளியீடு: நிகர்மொழி பதிப்பகம்.
நூல் வெளியீடு: 23.7.2022 மாலை6 மணி
இடம்: அன்பகம், தேனாம்பேட்டை, சென்னை
நிகழ்ச்சி தொடக்கம் : இந்திராகுமார்
வரவேற்புரை: அ. பிரபாகரன் (நிகர்மொழி பதிப்பகம்).
விருந்தினரை சிறப்பித்தல்: நினைவுப்பரிசு பயனாடை
ஜோண்சன், தமிழ்ச்செல்வன், (நிகர் மொழி)
நன்றியுரை: நூலாசிரியர் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து.
பங்கேற்றோர்
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, வழக்குரைஞர் வீரமர்த்தினி, மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், வி.சி. வில்வம், மற்றும் கழகத் தோழர்களும், பல்வேறு தரப்பினரும் வருகை தந்தனர். அரங்கம் நிறைய தோழர்கள் ஆர்வமுடன் உரைகளைச் செவி மடுத்தனர்.
செய்தித் தொகுப்பு:
கலி. பூங்குன்றன், வழக்குரைஞர் மதிவதனி


No comments:
Post a Comment