மலேசியத் திராவிடர் கழகத் தேசியத் தலைவர் ச.த. அண்ணாமலை 'டத்தோ' விருது பெற்றார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

மலேசியத் திராவிடர் கழகத் தேசியத் தலைவர் ச.த. அண்ணாமலை 'டத்தோ' விருது பெற்றார்

கோலாலம்பூர், ஜூலை 23 மலேசியத் திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர்  ச.த. அண்ணா மலை அவர்கள்; பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோசிறீ உத்தாமா அமாட் ஃபூசி அப்துல் ரசாக்கின் 73ஆம் அகவை நாளில், உயரிய டத்தோ விருது வழங்கி சிறப்பிக்கப் பட்டுள்ளார்.

இதுகுறித்து மலேசிய திராவிடர் கழக தோழர் இரெசு. முத்தையா தெரிவித்துள்ளதாவது:

மலேசிய திராவிடர் கழக வரலாற்றில் 'டத்தோ' விருது பெறும் முதல் தேசியத் தலைவர் என்ற பெருமை மதிப்புமிகு ச.த.அண்ணாமலையையே சாரும்.

இளவயது முதலாக, திராவிடர் கழகத்தில் தன்னை ஒருவராக இணைத்துக் கொண்டு  திறம்பட பணியாற்றி வருபவராவார்.  திராவிடர் கழகத்தில் அவரின் தொண்டு அளப்பரிய தாகும்.

மலேசியத் திராவிடர் கழகத்தில் - கிளைச் செயலாளர், தலைவர், மாநிலத் தலைவர், தேசிய உதவித் தலைவர் என படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு இன்று கழகத்தின் தேசியத் தலைவராக செயல்பட்டு வரும் வேளையில் அவருக்கு 'டத்தோ' விருது கிடைத்திருப்பது கழகத் திற்கு கிடைத்திட்ட உயரிய பெருமையாகும்.

'டத்தோ' விருது பெற்றுள்ள  ச.த. அண்ணா மலைக்கு மனமுவந்த வாழ்த்துகளை உரித்தாக்கு வதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்.

மலேசியத் திராவிடர் கழகத்தின் மேனாள் பணியாளன் என்ற உரிமையோடும்; மலேசிய மாந்த நேயத் திராவிடர் கழகத்தின்  சார்பாகவும்,  வாழ்த் துகளை மனநிறைவோடு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

தாங்கள், மேலும் மேலும் பல உயரிய விருது களைப் பெற்று பெருமையுற விழைகிறேன்.

வாழ்க பல்லாண்டு. வாழ்வாங்கு வாழ்க! 

என்று இரெசு. முத்தையா கூறியுள்ளார். 

No comments:

Post a Comment