
நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் 20 விடுதலை ஆண்டு சந்தா வழங்கினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல் ஆகியோர் 10.7.2022 அன்று சட்டமன்ற உறுப்பினரை சந்தித்தனர்.
--------------
--------------
திண்டிவனம் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்கும் பணியில் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்
--------------
--------------
கடலூர் மாவட்டம் வடக்குத்து பகுதியில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி
10.7.2022 அன்று கடலூர் மாவட்டம் வடக்குத்து ஊராட்சி, இந்திரா நகர் பகுதியில் விடுதலை சந்தா சேர்க்கை பணி நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல் ஆகியோர் சந்தா திரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தோழர்கள் அசோக், தர்மலிங்கம், சக்திவேல், திராவிடன் ஆகியோர் விடுதலை ஆண்டு சந்தா வழங்கினர்.
--------------திருப்பூர் கழக மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி
60 ஆயிரம் சந்தா சேர்க்கும் பணி திருப்பூர் மாவட்டத்தில் 10-07-2022 அன்று உற்சாகமாக நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் யாழ். ஆறுச்சாமி தலைமையில், அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் முன்னிலையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் கு. திலீபனுக்கு 10 சந்தாவுக்கான புத்தகங்கள், மாநகர இளைஞரணி செயலாளர் செல்வராசுக்கு 10 சந்தாவுக்கான புத்தகங்கள், தொழிலாளரணி செயலாளர் வீரமுத்துக்கு 10 சந்தாவுக்கான புத்தகங்கள், திருப்பூர் மாவட்ட இளைஞரணி துரைமுருகனுக்கு 10 சந்தாவுக்கான புத்தகங்கள், திருப்பூர் மாவட்ட இளைஞரணி குருவிஜயகாந்துக்கு 10 சந்தாவுக்கான புத்தகங்கள், திருப்பூர் மாவட்ட ப.க. தலைவர் குமாரராஜாவுக்கு 50 சந்தாவுக்கான புத்தகங்கள், திருப்பூர் மாநகர செயலாளர் கருணாகரனுக்கு 50 சந்தாவுக்கான புத்தகங்கள், அவினாசி முத்து சரவணனுக்கு 10 சந்தாவுக்கான புத்தகங்களை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார், நன்கொடை புத்தகத்தை பெற்றுக்கொண்டு சந்தா திரட்டித் தருவதாக உறுதியளித்தார்கள் (10-7-2022).
60 ஆயிரம் சந்தா சேர்க்கும் பணி திருப்பூர் மாவட்டத்தில் 11-07-2022 அன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் யாழ். ஆறுச்சாமி தலைமையில் அமைப்புசெயலாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்ட இளைஞரணி செயலாளர் கு.திலீபன் ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் யாழ் ஆறுச்சாமி-ஈஸ்வரி இணையர் விடுதலை ஆயுள் சந்தா அளிப்பு. திருப்பூர் தி.மு.க. 52ஆவது வட்ட செயலாளர் மு.நந்தகோபால் ஒரு ஆண்டு சந்தா, திருப்பூர் ம.தி.மு.க. வழக்குரைஞர் எ.ந.கந்தசாமி ஒரு ஆண்டு சந்தா, திருப்பூர் 55ஆவது வட்ட தி.மு.க. பிரதிநிதி கு.கணேசன் ஒரு ஆண்டு சந்தா கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர், நன்கொடை புத்தகத்தை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டு சந்தா திரட்டித் தருவதாக உறுதியளித்தார்கள் தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் வே.ஜெயபாலன் 10-07-2022 சுரண்டையில் 10 விடுதலை ஆண்டு சாந்தாக்கள் கொடுத்தார் உடன் பெரியார்குமார் மற்றும் ம.செந்தில்குமார்.
--------------
செங்கற்பட்டு மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி
செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் பொன்.இ ராஜேந்திரன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன், 20 சந்தா ரசீது பெற்றுக் கொண்டார். செய்யூர் திராவிடர் கழகத் தலைவர் சீனிவாசன்-இராதிகா இணையர் பத்து சந்தா ரசீது பெற்றுக்கொண்டார்கள். அரசூர் தெள்ளமிழ்து-சுபாசினி, முத்தமிழ்செல்வன்-பிரமிளா, செம்பியன், செந்தீ, இரா.குப்புசாமி குடும்பத்தின் சார்பில் ஆறுமாத விடுதலை சந்தாவழங்கியதுடன் பத்து சந்தா ரசீது பெற்றுக் கொண்டனர். மதுராந்தகம் நகர திராவிடர் கழக தலைவர் பொன்.மாறன் பத்து சந்தா ரசீது பெற்றுக்கொண்டார். மதுராந்தகம் கழக செயலாளர் ஏ.செல்வம்-நிர்மலா இணையர் பத்து சந்தா இரசீது பெற்றுக் கொண்டார்கள். (10.7.2022)
--------------
சந்தா வழங்கல்
‘விடுதலை‘ அச்சக மேலாளர் க.சரவணன்
-ச.சிறீப்ரியா ஆகியோரின் 20ஆவது திருமண நாளை (11.7.2022) முன்னிட்டு ஓராணடு ‘விடுதலை' சந்தா தொகை
ரூ.2000 நன்கொடையினை தமிழர்
தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.
--------------
சந்தா வழங்கல்
கழக காப்பாளர் நெய்வேலி வெ.ஜெயராமனின் 82ஆம் ஆண்டு பிறந்த நாள் (13.7.2022) மகிழ்வாக ‘விடுதலை' ஆண்டு சந்தா ரூ.2000 தமிழர் தலைவரி டம் வழங்கப்பட்டது.
--------------








No comments:
Post a Comment