சென்னை மெட்ரோ ரயிலில் 12 கோடி பேர் பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 4, 2022

சென்னை மெட்ரோ ரயிலில் 12 கோடி பேர் பயணம்

 சென்னை, ஜூலை 4 சென்னை மெட்ரோ ரெயிலில் 7 ஆண்டுகளில் 12 கோடி பேர் பயணித்து உள்ளனர். சென்னை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் மெட்ரோ ரயில் சேவைகளை கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கியது. அதன்படி கடந்த 7 ஆண்டுகளில் 12 கோடியே 28 லட்சத்து 24 ஆயிரத்து 577 பயணிகள் பயணித்து உள்ளனர். அதிகபட்சமாக கடந்த ஜூன் 3ஆம் தேதியில் 2 லட்சம் பேருக்கு மேல் பயணம் செய்தனர். மேலும் 20 சதவீதம் கட்டண தள்ளுபடி 'க்யு ஆர்' குறியீடு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment