சீனாவில் 10 கோடி ஆண்டுகள் பழைமையான டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 26, 2022

சீனாவில் 10 கோடி ஆண்டுகள் பழைமையான டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு

ஊஹான், ஜூலை.26 10 கோடி ஆண்டுகள் பழைமையான டைனோசரின் கால் தடம் ஒன்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் தென்மேற்கு பகுதி யில் அமைந்துள்ளது லெஷன் என்ற நகரம். இங்கு உணவகம் ஒன்றின் கட்டுமானத்தின்போது பல கோடி ஆண்டுகளுக்கு முந் தைய டைனோசர்கள் கால் தடம் கண்டறியப்பட்டதாக தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறும் போது, “ சிச்சுவான் மாகாணத்தின் லெஷனில் உள்ள உணவகத்தின் முற்றத்தில், கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த டைனோசர் களின் கால் தடங்கள் அங்கிருந்த கற்களில் காணப்பட்டன. இந்த கால் தடங்கள் பதியப்பட்டு 10 கோடி ஆண்டுகள் இருக்கும். இந்த கால் தடங்கள் அழுக்கு அடுக்குகளால் புதைக்கப்பட்டுள் ளன” என்று தெரிவித்தனர். கண் டறியப்பட்ட கால் தடங்கள் சவுரோபாட்ஸ் டைனோசர் வகையை சார்ந்தது. சீனாவில் கண்டறியப்பட்ட கால்தடம் சுமார் 26 அடி நீளம் கொண்டது.

சுமார் 10 கிலோமீட்டர் விட்டமுடைய ஒரு பெரிய விண்கல் பூமியில் மோதியதன் காரணமாகவும் அடுத்தடுத்து உண்டான இயற்கை மாற்றங் களாலும், காலநிலை மாற்றங் களாலும் டைனோசர்கள் இனம் அழிந்ததாக விஞ்ஞானிகள் கூறு கின்றனர்.

எனினும், இந்த விண்கல் மோதலில் டைனோசர் இனம் முழுமையாக அழிந்துவிட வில்லை என்றும், மெக்சிகோவின் யூகாடான் தீபகற்பத்தின் கீழே ஒரு மிகப்பெரிய எரிமலை வெடிப்பு டைனேசர்கள் அழி வுக்கு கூடுதல் காரணமாக அமைந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


No comments:

Post a Comment