ஆந்திர மாநிலத்திலிருந்து விண்வெளி வீராங்கனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

ஆந்திர மாநிலத்திலிருந்து விண்வெளி வீராங்கனை

திருப்பதி,ஜூன் 29- ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்தவர் சிரிஷா பண்ட்லா (வயது 34). இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரிட்டனின் பெரும் பணக்காரர் சர் ரிச்சர்ட் பிரான்சலுடன் விர்ஜின் கேலக் டிக் ராக்கெட் விமானத்தில், விண்வெளிக்குச் சென்று திரும் பிய சிரிஷா பண்ட்லாவை இந்தி யர்கள் கொண்டாடி வருகின் றனர். கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் வரிசை யில் தற்போது விண்வெளிக்குச் சென்று திரும்பிய இந்திய வம்சா வளி வீராங்கனையாக சிரிஷா பண்ட்லா திகழ்கிறார்.

அமெரிக்காவின் நியூ மெக்சி கோவில் இருந்து விண்வெளிக்குப் பறந்த ராக்கெட், ஒரு மணி நேரத் தில் பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்குத் திரும்பியது. வரலாற்றுப் பூர்வ பயணத்தில் சிரிஷா பண்ட்லா இடம்பெற்றது இந்தியாவில், குறிப்பாக அவர் பிறந்த ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் மிகுந்த உற்சா கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராக் கெட் வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியவுடன் இந்தியர்கள் சமூக ஊடகங்கள் மூலம் அவரை வாழ்த்தி வருகின்றனர். 

ஆந்திராவின் குண்டூர் மாவட் டத்தில் ஒரு சிறுமியாக வளர்ந்து வந்தேன். "எனது ஆரம்பகால நினைவுகளில் ஒன்று மின்வெட்டு, மின்தடை -  என் தாத்தா பாட் டியின் கூரை வீட்டில் தூங்கியது எனக்கு நினைவிருக்கிறது. இந்தி யாவில் நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமாக இருப்பதைப் பார்த் தது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத் தியது. அங்கே என்ன இருக்கிறது? என்று பார்க்க ஆசைப்பட்டேன். பார்வைக் குறைபாடு காரணமாக நாசா விண்வெளி வீராங்கனை யாக என்னால் இருக்க முடிய வில்லை அதற்குப் பதிலாக பொறி யாளர் வழியைப் பயன்படுத்தி னேன். 

கடந்த ஜூலை மாதம் பெரும் பணக்காரர் விர்ஜின் கேலக்டிக் கின் முதல் விண்வெளி விமானத் தில் சர் ரிச்சர்ட் பிரான்சனுடன் சென்ற குழுவில் இளம் விண் வெளி பொறியாளராக பணி யாற்றினேன். பூமிக்கு மேலே ஏறக்குறைய 90 கிலோ மீட்டர் வரை பயணம் செய்தது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. "பூமியைப் பார்த்ததும், வளி மண்டலத்தின் மெல்லிய நீலக் கோட்டைப் பார்ப்பதும் கிடைத்தற்கரிய வாய்ப்பு. நான் சிறு வயதிலிருந்தே விண்வெளி வீரர்கள். சந்திரனில் காலடி எடுத்து வைத்தவர்களின் வாழ்க் கையைப் படித்துள்ளேன். அவர் களை நான் மதிக்கிறேன். அவர் களின் பயணத்துடன் நான் என்னை இணைக்கவில்லை. எனது பயணத்தில் மிகவும் வித் தியாசமாக இதனை உணர்ந்தேன். -இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


No comments:

Post a Comment