தனியார் மயமாக்கும் மோடியரசுக்கு கடும் எதிர்ப்பு ரயில்வே ஊழியர்கள் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 16, 2022

தனியார் மயமாக்கும் மோடியரசுக்கு கடும் எதிர்ப்பு ரயில்வே ஊழியர்கள் போராட்டம்

திருச்சி, ஜூன் 16 - மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு  தாரை வார்த்து வருவதையே கொள் கையாக கொண்டுள்ளது. அதன்படி ஏர் இந்தியா தொடங்கி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் என பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் (14.6.2022) முதல் ரயில்வேத் துறையில் தனியார் மயமாக்கப்படுவதன் முதல் நிகழ்வாக தனியார் ரயில் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ரயில் வேத்துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரயில் இன்று இயக்கப்படும் நிலையில் ரயில்வே தொழிலாளர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக நேற்று முன் தினம் (14.6.2022) கண்டன ஆர்ப்பாட் டம் நடத்தினர். 

ஒன்றிய அரசு சுற்றுலா என்ற பெயரில் 'கோவை _- ஷிரடி' இடையிலான விரைவு ரயிலையும், 'ராமாயண யாத்ரா' என்கிற பெயரில் டில்லி  -_ நேபாள் விரைவு ரயிலையும், 'பாரத் கவுரவ்' என்கிற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்களையும் ஒன்றிய அரசு தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளது.

இதனை கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் தென்னக ரயில்வே முழுவதும் கருப்பு தினமாக அனுசரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று (15.6.2022) திருச்சி ரயில்வே பொன்மலை பணிமனை முன்பு எஸ்.ஆர்.எம்.யு துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் கண்டன போராட் டத்தில் ஈடுபட்டனர்.

பொதுச் சொத்துக்களை, அரசு துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும், சுற்றுலா என்ற பெயரில் ரயில்வேயை தனியா ருக்கு தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கண்டன முழக் கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப் பட்டது.


No comments:

Post a Comment