சிங்கப்பூரின் புத்தகக் கடையின் "மறைவுக்குறிப்பு" (Obituary) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 16, 2022

சிங்கப்பூரின் புத்தகக் கடையின் "மறைவுக்குறிப்பு" (Obituary)

 சிங்கப்பூரின் புத்தகக் கடையின் "மறைவுக்குறிப்பு" (Obituary)

சிங்கப்பூர், இலக்கிய நண்பர் இலியாஸ் ('செம்மொழி' இதழின் ஆசிரியர்) ஒரு செய்தியை அனுப்பியிருந்தார்: அதை அப்படியே தருகி றேன்.

" 'நாலெட்ஜ் புக் சென்­டர்’. பிராஸ் பாசா காம்பி ளெக்­சில் அமைந்­தி­ருக்­கும் இந்­த பழைய புத்­த­கக் கடை­யைப் பெரும்­பா­லோர் அறிந்­தி­ருப்­பர்.

45 ஆண்டுக்கு மேல் செயல்பட்ட பழைய புத்தகக் கடை விடைபெறுகிறது

1978ஆம் ஆண்­டில் இருந்து அந்­தக் கட்­ட­டத்­தில் செயல்­படும் இந்­தக் கடை விரை­வில் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் இருந்து விடை­பெ­ற­வி­ருக்­கிறது.

1975ஆம் ஆண்டு முதல் பாடப் புத்­த­கங்­கள், மதிப்­பீட்டு ஏடு­கள், ‘டென் இயர் சீரிஸ்’ எனப்­படும் கடந்த பத்து ஆண்­டு­களில் நடை­பெற்ற தேசிய அள­வி­லான தேர்­வுத் தாள்­கள் எனக் கல்வி சார்ந்த பொருள்­க­ளுக்­குப் பெயர் பெற்­றது இந்­தப் புத்­த­கக் கடை.

பள்ளி, கல்­லூரி, பல்­க­லைக்­கழக நிலை­யி­லான பழைய புத்­த­கங்­களை வாங்க விரும்­பும் பல­ரும் நாடும் இட­மாக இருந்து வந்­துள்ள இந்­தக் கடை இன்­னும் சில வாரங்­களில் மூடப்­ப­டக்­கூ­டும் என்று 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' அறி­கிறது.

குறைந்த விலை­யில் கல்வி சார்ந்த பழைய பொருள்­களை வாங்­கும் பல­ருக்­கும் இது ஏமாற்­ற­மாக அமை­யக்­கூ­டும்."

மறைந்த மனிதர்களுக்கு மட்டும்தான் நாம் 'மரணக் குறிப்பு' (Obituary) எழுதி எமது வருத்தம், துயரம், வேதனைகளை வெளிக்காட்டி ஆறுத லடைகிறோம்.

அதைவிட முக்கியம்; 'மறைந்த புத்தகக் கடைகள்' - மூடுவிழா காரணமாக! பல ஆண்டு அறிவு ஊருணிகளாக நம் பகுத்தறிவை, படிப்பறிவை, பட்டறிவை செழுமைப்படுத்திட்ட அறிவாயுதங்களான புத்தகங்களை விற்பனை செய்த புத்தக நிலையங்கள் மூடப்பட்டால், அதற்கு எழுதும் 'மரணக் குறிப்பு'  நமது துயரத்தை ஆற்றுப்படுத்திக் கொள்ளுவது ஆகும்!

காரணம் மனிதர்கள் மறையலாம்; ஆனால் அவர்களது சிந்தனைகளும், கருத்தியல்களும் மறையாது, மனித குலத்தை ஒழுங்குபடுத்தி நமது அறிவுத்தாகத்தைத் தீர்க்கும் தொண்டற தண்ணீர்ப் பந்தல்கள் அல்லவா அவைகள்?

பல ஆண்டுகளாக சிங்கப்பூர் ஆர்ச்சேட்  (Orchard) சாலையில் இருந்த 'பார்டர்ஸ்' (Borders) புத்தக விற்பனையகம் - உலகளாவிய நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட போதே நான் இதுபோல் வாழ்வியலில் எழுதி வருகிறேன்!

இப்போது அங்கே வேறு சில கடைகள் உண்டு; (அங்கே எமக்கென்ன வேலை?)

அந்த 'பார்டர்ஸ்' (Borders) புத்தகக் கடை, இரண்டு கல்லூரிமாணவர்கள் ஒரு காபிஅவுசில் உரையாடத்  துவங்கி சிறப்புடன் பன்னாட்டுச் சங்கிலி (International Chain) உருவாக்கிப் பரப்பினர்.

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சிகளின் தாக்கம் இதனையும் பதம் பார்த்ததுபோலும்!

சிங்கப்பூரில் இப்போது மேலே காட்டப்பட்ட புத்தகக் கடை பழைய புத்தகக் கடை - புதிய புத்தகங்களைவிட பழைய அரிய - புத்தகங்கள் அங்கே கிடைப்பது மிகப் பெரிய நல்வாய்ப்பு.

பிராஸ்பாஷா (Brasbasha Complex) என்ற பகுதியில் நான் பல முறை தோழருடன் சென்று பழைய நூல்கள் பலவற்றை வாங்கியுள்ளேன். பெரிதும் இஸ்லாமிய சகோதரர் அதிலும் பாபநாசம், பண்டார வாடை, அய்யம் பேட்டை, மயிலாடுதுறை தோழர்கள்தான் கடை "முதலாளிகள்". என்னை அடையாளம் கண்டு அன்புடன் உபசரித்துப் புத்தகம் தருவர்! சென்னையில் பழைய புத்தக விற்பனைத் தொண்டு செய்வோருக்கு 'பெரியார் விருது' கொடுத்தும் பாராட்டியுள் ளோம்!

பல விமான நிலையங்களில் புதிய புத்தகக் கடைகள்தான் வழக்கமாக இருக்கும்.

அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் (Wisconsin) மாநிலத்தின் பெரு நகரங்களில் ஒன்றான மில்வாக்கி  (Millwakee) விமான நிலையத்தில் அருமையான பழைய புத்தகக் கடை சிறப்பாக இருந்தது கண்டு வியந்து நூல்கள் வாங்கினோம். அரிய நூல்களின் தொகுப்பினை டாக்டர் சோம. இளங்கோவன் வாங்கி  சென்னை பெரியார் திடல் பெரியார் பகுத்தறிவு நூலகம் - ஆய்வகத்தில் அன்பளிப்பாகவும் தந்ததை மறக்கலமா?

இந்நிலையில் அந்த புத்தகக் கடை விற்பனை நண்பர்களுக்கு நமது வாழ்த்துகள் - அந்த இடம் சிங்கப்பூரின் பிரபல பல மாடி தேசிய நூலகம் அருகில் உள்ள பகுதியாகும்.

நினைவில் நீங்கா பிராஸ் பாஷா புத்தக நிலையமே... மனதில் வாழ்கிறாய்! மறைய மாட்டாய்! 


No comments:

Post a Comment