பதவி நீக்கத்திற்கு ஆளாகவிருக்கும் பாஜகவிடம் விலை போன சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

பதவி நீக்கத்திற்கு ஆளாகவிருக்கும் பாஜகவிடம் விலை போன சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள்

மும்பை, ஜூன் 27- மகாராட்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி யில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதலமைச்சராக உத் தவ் தாக்கரே செயல்பட்டு வரு கிறார்.

இந்நிலையில் சிவசேனா கட் சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பி னர்களுடன் அசாம் மாநிலம் கவு காத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்க, அம்மாநில அரசியலில் புயல் வீசத்துவங்கியது. இதில், 40 சட்ட மன்ற உறுப்பினர்கள் சிவசேனா வைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள சட்டமன்ற உறுப்பி னர்களை கண்டித்து சிவசேனா கட்சித் தொண்டர்கள் மகாராட் டிரா மாநிலம் முழுவதும் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில தலைநகர் மும்பையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி வரை இந்த தடையுத்தரவு அமலில் இருக்கும் என்று மும்பை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவசேனா ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவின் பணத்திற்கு விலை போன சட்டமன்ற உறுப்பினர் ஏக்நாத் ஷிண்டே உருவாக்கியுள்ள புதிய குழுவுக்கு “சிவசேனா பாலா சாஹேப் ”என பெயர் சூட்டப்பட்டு உள்ளது என அதிருப்திசட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான தீபக் கேசர்கார் கூறியுள்ளார். சட்டப் பேரவைத்தலைவரிடம் இருந்து சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறும் வரை இதுபோன்ற குழுக்களை ஏற்று கொள்ள முடியாது என மகாராட்டிர காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் கூறி யுள்ளார்.

மும்பையில்  நடைபெற்ற சிவசேனாவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய மகாராட்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, “என் தந்தை பால்தாக்கரேயின் பெயரை வேறு யாரும் பயன்படுத்த முடியாது; வேண்டுமென்றால் உங் கள் தந்தையின் பெயரை பயன் படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார். கூட்டத்தில் பேசிய சுற் றுலாத் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே, “கிளர்ச்சி சட்டமன்ற உறுப்பினர்களின் துரோகத்தை தங்கள் கட்சி மறக்காது. நாங்கள் (சிவசேனா) நிச்சயம் வெற்றி பெறு வோம்” என்று கூறினார்.

மகாராட்டிரா துணை அவைத் தலைவர் நர்ஹரி ஷிர்வாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மா னத்தை அவரது மின்னஞ்சலுக்கு பாஜக ஆதரவு சிவசேனா சட்ட மன்ற உறுப்பினர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அதிகாரப்பூர் வமற்ற இமெயில் இருந்து தீர் மானம் அனுப்பப்பட்டதால், அதை நிராகரிப்பதாக துணை அவைத்தலைவர் தெரிவித்தார். மேலும் எந்த சட்டமன்ற உறுப் பினரும் அதை தனது அலுவல கத்தில் சமர்ப்பிக்கவில்லை என் றும் அந்தக் கடிதத்தில் அசல் கையொப்பங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கவுகாத்தியில் ஏக்நாத் ஷிண் டேவுடன் தங்கியுள்ள 16 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மராட் டிய துணை அவைத்தலைவர் நர்ஹரி ஷிர்வால் தகுதி நீக்க தாக் கீதை அனுப்பியுள்ளார். அவர்கள் அனைவரும் எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பும்படி கேட்டு கொள் ளப்பட்டு உள்ளனர். அவர்களது பதில் திருப்தியாக இல்லாவிடில் தகுதி நீக்க நடவடிக்கைக்கு அவர் கள் ஆளாக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment